கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபலுடைய கொடும்பாவி இன்று வெள்ளிக்கிழமை எரிக்கப்பட்டது. குறித்த பிரதேச செயலாளரின் சொந்த ஊரான மருதமுனை பிரதேசத்திலேயே இன்று ஜும்மா தொழுகைக்கு பின்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து கொடும்பாவி எரிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து ஆரம்பித்து பிரதான வீதி ஊடாக இரண்டு கிலோ மீற்றர் வரை சென்று மருதமுனை மேற்கு மேட்டு வட்டையில் கடந்த 2004 ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்டு எட்டு வருடங்களாக இன்னும் கையளிக்கப்படாத வீடுட்டுத்திட்டத்தில் முடிவடைந்தது.
இதனையடுத்து, கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபலுக்கு எதிர்ப்பபு தெரிவித்து அவரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட 65 மீற்றருக்குட்பட்ட மக்களுக்காக அரசாங்கம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ள நிலையில், குறித்த வீடுகளை இன்னும் உரிய மக்களுக்கு வழங்காமல் வேறு வழியில் பிரதேச செயளாலர் துஷ்ப்பிரயோகம் செய்வதை தடுத்து நிறுத்துமாறும் குறித்த பிரதேச செயளாலரான எம்.எம்.நௌபலை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறும் கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட 65 மீற்றருக்குட்பட்டவர்களின் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டதுடன் உணவு சமைத்து வீதியோரங்களில் குடும்பத்தோடு உணவுகளை உண்டமை குறிப்பிடத்தக்கது.

.jpg)
.jpg)
No comments:
Post a Comment