தம்மை அபகீர்த்திக்குள்ளாக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டாமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பொலிஸ் மாஅதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியை அபகீர்த்திக்குள்ளாக்கியதாக கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குத்தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள் குறித்து கவனத்திற்கொண்டே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவமிக்க அரசியல்வாதி என்ற ரீதியில், தமக்கு அபகீர்த்தி ஏற்படுத்துகின்றவர்கள் குறித்து அனுதாபத்துடன் பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அப்பாவி பொதுமக்கள், அரசாங்க ஊழியர்கள், வர்த்தகர்கள் ஆகியோருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தல் மற்றும் சேறு பூசும் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்தி, அவர்களின் செயற்பாடுகளை உரியவாறு முன்னெடுப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்குமாறு பொலிஸ் மாஅதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை அபகீர்த்திக்குள்ளாக்கியதாக

No comments:
Post a Comment