அல்-மிஸ்பான்
இலங்கையில் முஸ்லிம்கள் பரந்து வாழ்கிறார்கள் அவர்களின் புனித கடமைகளில் ஒன்றாக இருக்கும் தொழுகையை சக முஸ்லிம் உறவுகளுடன் இணைந்து நடாத்த நிச்சயமாக ஒரு இடம் தேவை அந்த இடம்தான் புனிதமான பள்ளிவாசல் இதனை உடைக்கனும் தீவைக்கனும் என்றால் இது மனிதனின் பன்பு இல்லை இதற்க்கு என்ன கூறுவது என அட்டாளைச்சேனைப் பிரதேசசபை உறுப்பினரும் பிரபல சமூக சேவையாளருமான தேசகீர்த்தி எஸ்.எல்.முனாஸ் தனதறிக்கையில்
குறிப்பிட்டார்.
உன்னிச்சையில் பள்ளிவாசல் தீவைக்கப் பட்ட விடையம் தொடர்பாக எஸ்,எல்.முனாஸ் விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்
இன்று நடக்கும் விடையம் இறுதி நாளுக்கான அடையாளமாக இருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது அந்தளவு உலக முஸ்லீம்களுக்கு அநியாயம் அட்டூளியம் நடந்து வருகிறது உலகத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் எந்த மதத்தினரையோ பொதுமக்களையோ வீனாக அநியாயம் செய்ய வில்லை கொன்று குவிக்க வில்லை மாறாக இன்று உலகில் சில பகுதிகளில் அப்பாவி முஸ்லிம் மக்களின் உயிர்களைப் பறித்து உடமைகளை சூறையாடி கோடூரமான செயலில் சிலர் அந்த அந்த நாட்டு அரசின் ஆசிர்வாதத்துடன் செய்யும் இந்த இளிவுகரமான கொடூரச் செயலினை ஒரு மனிதனாக இருந்து யாராலும் சகிக்க முடியாது அதிலும் முஸ்லிமாக இருந்து கொண்டு பொறுமையுடன் இருக்க முடியாது..
இலங்கையில் நடக்கும் பள்ளிவாசல் ஆக்கிரமிப்புக்கள் தீவைப்புக்கள் எல்லாம் ஏன் ஆண்டாண்டு காலம் முஸ்லிம்கள் யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் அவர்களின் பாட்டில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போது இடையில் நுளைந்த காட்டுமிராண்டிகளின் வேலை செய்வதனை பார்த்துக்கொண்டிருக்கலாமா? கடந்த சனிக்கிழமை உன்னிச்சையில் ஒரு அப்பாவி பெண்ணை கோடாரியால் கொத்தி அங்கிருந்த பள்ளிக்கு தீ வைத்து எரித்த சம்பவம் ஏன் எதற்கு நடந்தது என்பதனை மக்கள் யோசிக்க வேண்டிய தருணம் இதுவாக இருக்கிறது.
உன்னிச்சைப் பகுதியில் புதிதாக ஒன்றும் அங்கு மக்கள் குடியேற வில்லை யுத்த காலத்தில் இடம்பெயர்ந்தவர்கள்தான் அவர்களின் சொந்த இடங்களுக்கு சென்று வாழ்கிறார்கள் எனவே இந்த மக்கள் மீண்டும் குடியமர்வதனைப்பொறுக்காத சில விசமிகள் செய்யும் அநியாயமான இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என அவ்வறிக்கயில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment