முஸ்லிம்களை உன்னிச்சையில் மீள் குடியேறுவதை தடுப்பதற்காகவே உன்னிச்சை பள்ளிவாயலுக்கு தீ வைத்ததும் உன்னிச்சையில் முஸ்லிம் பெண்ணொருவரை வெட்டிக்காயப்படுத்திய சம்பவமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான றஊப் ஹக்கீம் தெரிவித்தார்.
இன்று உன்னிச்சைக்கு
விஜயம் செய்து அங்குள்ள சேதங்களை பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.இங்கு தொடாந்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஹக்கீம் உன்னிச்சைக்கு நேரடியாக சென்று நிலைமைகளை பார்வையிட்டோம்.
அங்கு நிலைமைய இராணுவத்தினர் சுமூக நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். தீ வைத்து எரிக்கப்பட்ட அந்த பள்ளிவாயலை தற்காலிகமாக இராணுவத்தினர் புனரமைத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ்மா அதிபருடன் பேசி இங்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் ரோந்து நடவடிக்கைகளை போடுமாறு கேட்டுள்ளோம்.
இங்கு மீள்குடியேறியுள்ள 29 குடும்பங்களுக்குரிய கொடுப்பனவுக்கான ஏற்பாடுகள், மீள்குடியேற்றம் செய்வதற்கான நிதியை பெற்றுக்கொள்வதற்கான பத்திரங்கள் ஏற்கனவே இங்கிருக்கின்ற பிரதேச செயலாளரிடம் கொடுக்கப்பட்டும் இவர்களுக்கான நிதியை பெற்றுக்கொடுக்க இங்குள்ள பிரதேச செயலாளர் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டையும் இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
இந்த அசம்பாவிதங்களில் ஈடுபடுகின்ற இந்த சுற்றுப்புறத்திலுள்ள ஒரு சிலர் அடிக்கடி இந்த உன்னிச்சையில் மீள் குடியேறியுள்ள முஸ்லிம்களை அச்சுறுத்தி வந்த நிலையை தொடர்ந்து நேற்று இங்கு மீள்குடியேறியுள்ள பெண்ணொருவரை வெட்டி காயப்படுத்தியிருப்பதோடு பள்ளிவாயல் மற்றும் குடியிருப்புக்களையும் தீக்கிரையாக்கியிருக்கின்றார்கள்.
இவ்வாறான அசம்பாவிதங்களுக்கு இடம் கொடுக்காமல் இங்கு மீள் குடியேற்றத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்ளவிருக்கின்றோம். அரசாங்கம் இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என நினைக்கின்றேன்.
இவ்வாறான சம்பவங்களுக்கு இடம் கொடுப்போமானால் மீள் குடியேற்றம் சாத்தியமற்றதாகி விடும். இங்குள்ள மக்கள் அடிக்கடி இடம் பெயர்ந்து செல்வதும் அச்சுறுத்தப்படுவதும் இந்நிலையில் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதும் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக அவர்களுக்கு உத்தரவாதம் கொடுத்து முழு முயற்சிகளையும் செய்து இந்த உன்னிச்சை பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நடைபெற்றுள்ள அசம்பாவிதம் மேலும் தொடராமல் இருப்பதற்கு நாம் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்.
இந்த உன்னிச்சை சம்பவத்தை இரண்டு இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையை இந்த கால கட்டத்தில் உருவாக்குவதற்கு சில தீய சக்கதிகள் முயற்சிகளை மேற் கொள்ளக் கூடும் என்ற அபாயமும் உண்டு அதற்கு இரண்டு சமூகங்களும் போய்விடக்கூடாது. பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் நாம் இருக்க வேண்டும்.
இந்த உன்னிச்சை முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க தரப்பிலே இருக்கின்ற தமிழ் அரசியல் முக்கியஸ்த்தர்களிடம் கலந்து பேசவேண்டும் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
thanks. kattankudy info



No comments:
Post a Comment