முஸ்லிம்களின் புனித நோன்பு காலத்தில் உன்னிச்சை இறு நூறுவில் கிராமத்திலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாயல் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தையும் முஸ்லிம் பெண்ணொருவர் தாக்கப்பட்ட சம்பவத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், மற்றும் சி.யோகேஸ்பரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் பாவற்கொடிச்சேனை எனும் கிரமத்தில் மீள் குடியேறிய முஸ்லிம் மக்களின் வழிபாட்டுத்தலமான பள்ளிவாயல் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தையும் ஒரு குடும்பப்பெண் தாக்கப்பட்ட சம்பவத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.
கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் இடம் பெற்றுவரும் இந்த வேளையிலும் முஸ்லிம் மக்கள் புனித நோன்பு அனுஷ்டிக்கும் இக்கால கட்டத்திலும் இவ்வாறான ஒரு வழிபாட்டுத்தலத்தையும் முஸ்லிம் பெண்ணொருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஆயுதப்போர் இடம்பெற்று முடிவுக்கு வந்து சமாதான காலம் என அரசாங்கம் அறிவித்த பின்பும் தமிழ் முஸ்லிம் மக்களின் இயல்பு வாழ்வையும் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையையும் சீர்குலைப்பதற்காக திட்டமிட்டு இந்த செயலை யார் செய்திருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி இவர்களுக்கான தண்டணையை வழங்கப்படவேண்டுமென வேண்டுகின்றோம் என அவர்களின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
thanks kattankudy

No comments:
Post a Comment