அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு ஏழு மணியளவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளரின் தேர்தல் காரியாலயமொன்று எதிர்க்கட்சி ஆதரவாளர்களினால் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டதோடு, மற்றொரு காரியாலயம் தீ வைத்துக் கொழுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பையின்
தேர்தல் காரியாலயங்களே இவ்வாறு சேதமாக்கப்பட்டன.
நேற்று மாலை, அமைச்சர் ஹக்கீம், அக்கரைப்பற்று வேட்பாளர்களால் அக்கரைப்பற்றில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற வாகனத் தொடரின் மீது, அட்டாளைச் சேனையிலுள்ள முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பையின் தேர்தல் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் வைத்து கல் வீச்சு மேற்கொள்ளப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலவரத்திலேயே இக் காரியாலயங்கள் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment