ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் அக்கரைப்பற்றில் நேற்று நடைபெறவிருந்த இப்தார் நிகழ்வு மற்றும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீமின் வருகையை கண்டித்தும் தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்கள் சுலோகமேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தை அடுத்து அக்கரைப்பற்றில் பல்லாயிரக்கணக்கான கலகமடக்கும் பொலிஸாரும் இரானுவத்தினரும் குவிக்கப்பட்டனர் இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல்காசிம் மற்றும் வேட்பாளாகள், ஆதரவாளர்கள் ஆகியோர் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் றணகலவிடம் சம்பவம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டதுடன் இறுதி நேரம் வரைக்கும் வீதிகளில் குவிந்து கானப்பட்டதுடன் அவர்கள் இப்தார் நிகழ்வையும் வீதிகளில் நின்றவாரே நிரைவேற்றினர். அதே சமயம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீமின் அக்கரைப்பற்று விஜயம் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
thanks metromirror





No comments:
Post a Comment