நேற்று அக்கரைப்பற்று மாகாணசபை வேட்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நிகழ்வு அமைச்சர் அதாஉல்லாவின் ஆதரவாளர்களால் தடுக்கப்பட்டு பல நஷ்டங்களையும் ஏற்படுத்தியது அதனை எதிர்த்து சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்
அங்கு அவர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அக்கரைப்பற்று சம்பவம் முற்று முழுதாக அக்கரைப்பற்று பொலிசாரின் உதவியுடந்தான் நடந்தேறியது அதுமட்டுமல்லாது அம்பாரை மாவட் ட பொலிஸ் அத்தியேட்சகரின் பக்கசார்பான கேவலத்தையும் எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை வேட்பாளர்களும் நேரடியாக கண்டறிந்தார்கள்
எனவே உடனடியாக அவரை இடமாற்றாதவரை ஒரு நீதியான தேர்தலை கிழக்கு மாகாணத்தில் காணமுடியாது என்பது தெட்டத்தெளிவான உண்மை என்றும் கூறினார் இதற்க்கு மாற்று நடவடிக்கை ஏதும் உண்டா என்ற கேள்விக்கு- இதனை நாங்கள் தேர்தல் ஆணையாளருக்கு அவசரமாக அறிவிப்போம் அவர்தான் அதனை செய்ய வேண்டியுள்ளது என்றார்.
அதனைத்தொடர்ந்து அதாஉல்லா அணியினரால் தாக்கப்பட்டு வைத்தியசாலியில் சிகிச்சை பெற்று வரும் ஆதரவாளர்களையும் சந்தித்தார்.







No comments:
Post a Comment