அவுஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த 52 பேர் ஆழ்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்டெடுக்கப் பட்டுள்ளனர். இலங்கையிலிருந்து சுமார் 235 கடல் மைல் தொலைவில் மீட்டெடுக்கப்பட்ட 52 பேரும் கடற்படை கப்பல் மூலம் காலி துறைமுகத்திற்கு நேற்று அழைத்துவரப்பட்டனர். 52 பேரும் சட்டவிரோதமாக பயணம் செய்த படகு ஆழ்கடலில் பழுதடைந்ததால் இந்த பாரிய அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் நோக்குடன் கடந்த மாதம் 26ம் திகதி சிலாபத்திலிருந்து 52 பேர் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இவர்கள் சென்ற படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த 20 நாட்களாக ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளனர். இது தொடர்பில் கடற்படையினருக்கு கடந்த 13ம் திகதி தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை அடுத்து இலங்கைக் கடற்படைக்குச் சொந்தமான சமுதுர கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி கப்பல் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 52 பேரையும் பாதுகாப்பாக மீட்டெடுத்துக் கொண்டு நேற்றுக் காலை காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மீட்டெடுக்கப்பட்ட 52 பேர்களில் 38 தமிழர்கள், 9 சிங்களவர்கள் மற்றும் 5 முஸ்லிம்களும் அடங்குவர்.

No comments:
Post a Comment