Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Monday, September 17, 2012

முதலமைச்சர் முஸ்லிம் என்பது உறுதி : ஹக்கீம்- தமிழ் கூட்டமைப்புடனும் பேச்சு

இன்று காலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளது . இந்த பேச்சில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தம்முடன் இணைந்து ஆட்சியை அமைக்க உதவுமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை கோரியுள்ளது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

 இன்று கொழும்பு தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரபின் 12வது
மறைந்த தின வைபவத்தில் கலந்து கொண்டு ஊரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் நாங்கள் அரசுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்போடும் பேச்சுவார்தையில் ஈடுபட்டோம். இன்று காலை தமிழ் தேசிய கூட்டமைப்போடு பேச்சுவார்தையில் ஈடுபட்ட வேளை நாங்கள் மூவின மக்களுக்கும் பொருத்தமான ஆட்சி கிழக்கில் அமைவதை வலியுறுத்திக் கூறினோம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவர்களுடன் இணைந்து ஆட்சியை அமைக்க உதவுமாறு எங்களை கேட்டுக்கொண்டனர்.

ஆனால் நாங்கள் அரசுக்கு அதரவு அளிப்பதா ? இல்லையா ? என்பதை திட்டவட்டமாகக் கூறவில்லை என்று தெரிவித்தார் . அதேவேளை கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் முஸ்லிம் என்பது உறுதி என்றும் தெரிவித்தார். நேற்று சனிக் கிழமை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் பேச்சு இடம்பெறவிருந்தபோதும் நேற்று இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த பேச்சே இன்று இடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள தகவலில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது தேர்தல் பிரசாரங்களில் பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார். வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவது வெக்கக்கேடானது என்றும் கூறியிருந்தார். மொத்தத்தில் அரசுக்கு எதிராக பிரசாரத்தினை மேற்கொண்டுதான் 7 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது முஸ்லிம் காங்கிரஸ். முஸ்லிம் காங்கிரஸின் அரசுக்கெதிரான பிரசாரங்களை நம்பி ஜனநாயக ரீதியில் வாக்களித்த முஸ்லிம் மக்களை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் கைவிடக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பேசியபோது -தேர்தல் காலங்களில் வெற்றிலைச்சின்னத்தை அவமதித்து பேசியதாகவும் சிலர் கூறுகின்றனர் ஆனால் இது தவறான வாதமாகும்.தேர்தல் காலங்களில் நாங்கள் யாருடனும் ஆட்சி அமைப்பது என்று சொல்லவுமில்லை ‘தூர சிந்தனையுடன்தான் எங்களது மேடைப் பேச்சுகள் இருந்தது.என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment