மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகள் சிலர் இன்று காலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
*மட்டக்களப்பு சிறைச்சாலையில் பேரின சமூகத்தைச் சோர்ந்த சிறைச்சாலை அதிகாரிகளை மாற்றி தமிழ் பேசும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
*சிறைக்கைதிகளுக்கான சாப்பாடு சரியாக வழங்கப்படல் வேண்டும்.
*சிறைக்கைதிகளின் மருத்துவ விடயங்களில் பூரணமான அக்கறை செலுத்தப்படல் வேண்டும்
என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இவ் உண்ணாவிரதத்தில் கைதிகள் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள 6 கைதிகள் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சிறைக்கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் சாகும் வரை உண்ணாவிரதமாக தொடரப்போவதாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதியொருவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி அதில் இருந்தவாறு இந்த கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளுடன் அதிகாரிகள் பேசியும் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை.

No comments:
Post a Comment