மெனிக்பாம் முகாமை மூடிவிட்டு அங்கு எஞ்சியிருந்த இடம்பெயர்ந்த மக்களை முல்லைத்தீவிலுள்ள காட்டுப் பகுதியில் எதுவித அடிப்படை வசதிகளுமின்றி ஆநாதரவாக விடப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மீள்குடியேற்ற அமைச்சு முற்றாக நிராகரித்துள்ளது.
சில ஊடகங்களும் அரசியல் கட்சிகளுமே இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ள போதும், மீள்குடியேற்றப்பட்ட எவரும் இது தொடர்பில் முறையிடவில்லை எனவும் மக்கள் சொந்த விருப்பத்துடனே மீள்குடியேறியுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாஸ தினகரனுக்குத் தெரிவித்தார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த சுமார் 3 இலட்சம் மக்களில் இறுதியாக எஞ்சியிருந்த 400க்கும் அதிகமான குடும்பங்கள் நேற்று முன்தினம் மீள்குடியேற்றப்பட்டனர். இதனையடுத்து மெனிக்பாம் நலன்புரி முகாம் மூடப்பட்டது. மக்களுக்கு வசதிகள் எதுவும் வழங்காமலே அவர்கள் மீள்குடியேற்றப்பட்டதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளது குறித்து கருத்துத் தெரிவித்த மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர்,
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சுமார் 3 இலட்சம் மக்களில் சுமார் 2,97,000 பேர் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றப்பட்டனர். இவர்களில் எஞ்சிய கடைசி தொகுதியினரே இவ்வாறு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் மீள்குடியேற்றப்பட்டனர்.
ஏற்கெனவே, மீள்குடியேற்றப்பட்ட மக்களைப் போன்றே இவர்களும் உரிய சகல வசதிகளும் வழங்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்டார்கள். உலர் உணவு, நிவாரண உதவி, விவசாய உதவி, விதைகள் அடங்கலாக ஆரம்ப தேவைகள் யாவும் அவர்களுக்கு வழங்கப்பட்டன எனவும் செயலாளர் குறிப்பிட்டார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இப்பிரதேசத்திலே கூடுதலான மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. இதனால், அவற்றை அகற்றி இவர்களை மீள்குடியேற்ற தாமதமானது. இவர்கள் முன்பு இருந்த இடத்திற்கு அண்மையிலே தற்பொழுது மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
கேப்பாபிலவு பகுதியில் 50 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களின் சொந்த இடங்களில் இராணுவம் உள்ளது. இவர்களுக்கு அரசாங்கம் வீடுகளை நிர்மாணித்து வழங்க உள்ளதோடு, இதற்காக 32 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஏனையவர்கள் இங்கு குடியேற விரும்பாததால் சூரிபுரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களும் கேப்பாபிலவுக்கு வர இணங்கினால் இவர்களுக்கும் வீடுகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஒரு வாரத்திற்கு முன்னரே இப்பகுதியில் மிதிவெடி அகற்றப்பட்டது தொடர்பில் யு.என்.எச்.சி.ஆர். இன் அனுமதிக் கடிதம் கிடைத்தது.
மிதிவெடி அகற்றப்படாவிட்டாலும் பரவாயில்லை தங்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துமாறே மெனிக்பாமில் இருந்த மக்கள் கோரியதாக கூறிய செயலாளர் சுய விருப்புடனே அவர்கள் மீள்குடியேற வந்ததாக குறிப்பிட்டார்.
தாம் முன்பு இருந்த இடத்துக்கு அருகில் உள்ள இடத்திலே இவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இங்கு குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், அரசாங்கம் இவர்களை கைவிடாது. மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அநீதி ஏற்பட இடமளிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.
மீள்குடியேற்றம் முடிவடைந்த போதும் மீள்குடியேற்ற அமைச்சு சொந்த இடங்களில் மீள்குடியேற்றிய மக்களின் நலன்களை பேணும் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்காது எனவும் செயலாளர் குறிப்பிட்டார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர்களின் வாழ்க்கையை முன்பிருந்த நிலைமைக்கு உயர்த்த சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற மீள்குடியேற்ற நிகழ்விற்கு கோப்பாப்பிலவு மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார். மீள்குடியேற்றும் அனைவரும் இந்த நிகழ்விற்கு அழைத்து வரப்படவில்லை எனவும், அடையாள உத்தியோகபூர்வ நிகழ்வாகவே இது நடந்தது எனவும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment