Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, September 27, 2012

முஸ்லிம்களின் இறைமையை உதாசீனம் செய்தமைக்கு ஹக்கீம் பதில் சொல்லியே ஆக வேண்டும் - சம்பந்தன்

தீர்வு தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல முஸ்லிம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும். இறைமை மக்களுக்கு உரியது. இது தலைவருக்கோ அல்லது கட்சிக்கோ மாத்திரம் உரியது அல்ல. ஜனநாயம் இறைமையின் ஒரு அம்சம். இது மக்களுக்கு உரியது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம
்பந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றி ஒரு நோக்கு என்ற தலைப்பில் திருகோணமலையில் புதன்கிழமை 26.09.2012 மாலை கூட்டமொன்று நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சி.தண்டாயுதபாணி, கு.நாகேஸ்வரன், ஜெ.ஜனார்த்தன் ஆகியோருடன் வேட்பாளர்களான, மருத்துவர் திருமதி இந்திராணி தர்மராஜா, வெ.சுரேஷ், சி.பளீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் க.துரைரெட்ணசிங்கம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இங்கு சம்பந்தன் மேலும் உரையாற்றுகையில்,

வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவது எமக்கு அவமானம் எனத் தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசுக்கு எதிராக மரச் சின்னத்தில் போட்டியிடுவதே பெருமை என தேர்தல் காலத்தில் முஸ்லிம் மக்கள் முன்னிலையில் தெரிவித்தார்.

அரசாங்கத்தை விமர்சித்து தேர்தலில் போட்டியிட்டதால் மக்களின் வாக்கு கணிசமாக அவருக்கு கிடைத்தது. தற்போது ஜனநாயக முடிவுக்கு மாறாக அரசுடன் இணைந்து ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

மக்களின் ஜனநாயக தீர்வு புறந்தள்ளப்பட்டு முஸ்லிம் மக்களின் இறைமை உதாசீனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஹக்கீம் முஸ்லிம் மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment