நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை- லிந்துலை பகுதியில் 10 அடி நீளமான சுரங்கப் பாதை ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா - ஹட்டன் வீதி
புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பெக்கோ இயந்திரத்தினால் மலைப்பகுதி ஒன்றை வெட்டிய போது லிந்துலை பெயார்வெல் தோட்டத்திற்கு அண்மையில் இந்த சுரங்க பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனை பார்வையிட்ட தொல்பொருளியல் அதிகாரிகள் இப் பாதை 3 திசைகளுக்கு பிரிந்து செல்வதாக தெரிவித்தனர்.
இந்த சுரங்கப் பாதை தொல்பொருளியல் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக அமையலாம் என்ற சந்தேகத்தில் தொல்பொருளியல் மற்றும் புவி சரிதவியலாளர்களை கொண்டு பரிசோதனைகள் நடத்தும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.




No comments:
Post a Comment