ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்த சகோதரர்கள் அமைதியாக இருக்க வேறு கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் முதலமைச்சர் பற்றியும் முஸ்லிம் காங்கிரசின் நலன் பற்றியும் தற்போது பேசுவது வேடிக்கையாக உள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளரும் காத்தா
ன்குடி ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவருமான எம்.ஸ்.நசார் தெரிவித்தார்.
நேற்று அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே நசார் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேரம் பேசும் சக்தியாக இன்று மாறியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை ஒரு பேரம் பேசும் சக்தியாக இன்று கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்கள் மாற்றியுள்ளனர். கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகப்படியான முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கே வாக்களித்துள்ளனர்.
இந் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபையில் ஆட்சியமைக்க வேண்டுமென சிலர் கூறுகின்றனர். இன்னுமொரு இரத்த ஆற்றை ஓடவைப்பதற்கு இவர்கள் விரும்புகின்றனர்
ஓட்டு மொத்த இலங்கையிலுள்ள ஏனைய முஸ்லிம்களின் நிலையை பற்றியும் இவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரசை இவர்கள் விமர்சிப்பதற்கு இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.
ஏனெனில் முஸ்லிம் காங்கிரசை இவர்கள் இந்த தேர்தலில் மிக மோசமாக விமர்சித்தவர்கள் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். இலங்கையின் தென் பகுதி முஸ்லிம்களின் நலன்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும் முடிவில் பாதிக்கப்பட்டு விடக் கூடாது.
மரத்திற்கு வாக்களித்தவர்கள் அமைதியாக இருக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்காதவர்கள் கொக்கரித்து திரிகின்றனர் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment