இறை தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை கொச்சப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் என அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்த்தின் செயலாளர் எம்.எம்.பஹீஜ் வெளியிட்டுள்ள கண்டன தீர்மானத்திலேயே மேற்கண்டவாறு
குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"உலக முஸ்லிம்கள் தமது உயிரிலும் மேலாக அன்புவைத்து மரியாதை செலுத்துகின்ற இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை கொச்சப்படுத்தும் வகையிலும் இஸ்லாமிய மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் உலக முஸ்லிம்களின் மத நம்பிக்கையையும் உணர்வுகளையும் கேவலப்படுத்தும் விதமாகவும் அமெரிக்க பிரஜையான சேம் பஸில் அல்லது நக்லோ எனப்படுபவரால் தயாரிக்கப்பட்ட The Innocence Of Muslimஎன்ற திரைப்படத்தை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
உலக முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்தி அவர்களின் மத நம்பிக்கை மீது சேறுபூசி இஸ்லாத்தைப் பற்றியும் இறை தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை ஏனைய முஸ்லிம் அல்லாதோர் மத்தியில் பரப்புவதற்கான முயற்சியின் ஒரு அங்கமாகவே நாம் இத்திரைப்படத்தை பாரக்;கிறோம்.
எனவே உலக முஸ்லிம்களின் மத உரிமை மத சுதந்திரம் உணர்வுகள் என்பவற்றை மீறுகின்ற வகையில் அமைந்துள்ள இத்திரைப்படம் சர்வதேசரீதியாக தடைசெய்யப்பட வேண்டும் என நாம் சர்வதேச சமூகத்தை கோருகின்றோம். மேலும் இத்திரைப்பட விடயத்தில் ஊடகங்கள் மிகக் கவனமாக நடந்துகொள்ளவேண்டும் என சுட்டிக்காட்டுகின்றோம்.
பல்லின சமூகங்கள் புரிந்துணர்வுடனும் மத சுதந்திரத்துடனும் வாழும் நமது நாட்டில் இத்தகைய மலின சிந்தனையும் கருத்தும் கொண்ட முஸ்லிம்களின் மத உரிமைகளை மீறுகின்ற திரைப்படங்கள் திரையிடப்படக்கூடாது. அதற்கு அரசு தடைவிதிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை கோருகின்றோம்".

No comments:
Post a Comment