Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, September 19, 2012

பிரச்சினைக்குத் தீர்வு ஜனாதிபதியிடமே உள்ளது லண்டனுக்கு செல்வதால் பயனில்லை: நிம

லண்டனுக்கு விஜயங்களை மேற்கொள்வதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டு விடாது. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடனும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனுமே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். அதற்காக அழைப்பு விடுக்கின்றோம் ௭ன சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று சபையில் தெரிவித்தார். 


வட மாகாண தேர்தல் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியினால் பாராளுமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இங்கு மேலும் கூறுகையில், கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அதில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. 

இங்கு தேர்தல் மிகவும் சுயாதீனமாக இடம்பெற்றுள்ளது. அதனாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. இந்நிலையில் சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் பேசுவது அர்த்தமற்றது. சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாமலேயே தேர்தல் நன்றாக நடந்துள்ளது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் நாம் சர்வதேசத்தின் கருத்துக்களுக்கும் அதன் தேவைகளுக்கும் அல்லது சட்டங்களுக்கும்  உட்பட்டு செயற்பட வேண்டிய தேவையில்லை. அத்துடன் ௭ந்தவொரு அழுத்தத்துக்கும் நாம் பணியவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை அது ௭தனைப் பெற வேண்டுமானாலும் அரசாங்கத்திடம் வாருங்கள் ௭ன்று கூறுகின்றோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ௭தனையும் பெற்றுக் கொள்ள முடியும் ௭ன்றார்.

No comments:

Post a Comment