(misfa)
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் விவகாரம் தொடர்பான வழக்கில், பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் வழக்கை விசாரிக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் பிரதமர் கிலானியின் பதவி பறிக்கப்பட்டது. புதிய பிரதமராக ராஜா பர்வேஸ் அஷ்ரப் பதவியேற்றார். சர்தாரி மீதான ஊழல் வழக்கை விசாரிக்கும்படி இவருக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், அதிபருக்கு சிறப்பு அதிகாரங்கள் இருப்பதாக கூறி பிரதமர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து இவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆகஸ்ட் 27ம் தேதி ஆஜராக ராஜா பர்வேசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, இன்று காலை 9 மணிக்கே பிரதமர் ராஜா பர்வேஸ், சுப்ரீம் கோர்ட் வந்தார். கோர்ட் அலுவல் தொடங்கியதும் நீதிபதி ஆசிப் சயீத் கோசா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் வழக்கை விசாரித்தது.
நீதிபதிகள் முன்பு ஆஜரான பிரதமர் ராஜா பர்வேஸ், Ôஅதிபர் சர்தாரி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க நடவடிக்கை எடுப்பதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும். எனவே, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக அளிக்கப்பட்ட நோட்டீசை திரும்ப பெற வேண்டும்Õ என்று கோரினார். இதை விசாரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை செப்டம்பர் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. சுப்ரீம் கோர்ட்டில் பிரதமர் ஆஜராவதை முன்னிட்டு, அந்த பகுதி முழுவதும் 700க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்

No comments:
Post a Comment