தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள மறுத்த இளைஞரின் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு, அவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டதாக கூச்சலிடப்போவதாக அச்சுறுத்திய பெண்ணொருவருக்கு பிரித்தானிய நீதிமன்றமொன்று 3 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஜோனி பக்லி என்ற பெண்ணே டேவிட் தாவெஸ் என்பவரின் வயிற்றில் கத்தியால் குத்தி அச்சுறுத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற
தினத்தன்று டேவிட்டை ஜோனி பக்லி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடும்படி டேவிட் தாவெஸை பக்லி வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் அதற்கு டேவிட் மறுத்துள்ளார். இதன்போது அங்கிருந்த சோபி என்ற அவரது நண்பி டேவிட்டின் தலையில் தாக்கியுள்ளனர்.
பின்னர் ஜோனி பக்லி, டேவிட்டிடமிருந்த பணத்தை எடுத்துள்ளார்.
இதனையடுத்து தனது உடைமைகளை தருமாறு டேவிட் தாவெஸ் கேட்கவே ஜோனி அவரை கத்தியால் குத்தி அச்சுறுத்தியுள்ளார்.
ஆனால் டேவிட் அவர்களிடமிருந்து ஒருவாறு தப்பி பொலிஸாருக்கு இது தொடர்பில் அறிவிக்கவும் ஜோனி பக்லியும் சோபியும் கைது செய்யப்பட்டனர்.
பக்லியின் நண்பி சோபிக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment