Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, September 20, 2012

இலங்கை சர்வமதத் தலைவர்கள் நாளை பேரணிக்கு அழைப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை யும், புனித இஸ்லாத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அமெரிக் காவில் வெளியிடப்பட்ட “முஸ்லிம் களின் அப்பாவித்தனம்” என்ற திரைப்படத்தை இலங்கையிலுள்ள சர்வமத தலைவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.


எந்த ஒரு மதத்தையும் எவரும் இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இவ்வாறான மிகவும் கீழ்த் தரமான திரைப்படத்தை உடனடியாக தடுத்து நி
றுத்தி அதனை தயாரித்தவர்களுக்கு எதிராக கடுமை யான தண்டனை வழங்க வேண்டும் என்றும் சர்வமத தலைவர்கள் கோரி க்கை விடுத்தனர்.

உலகில் எந்த ஒரு நாட்டிலும் இந்த திரைப்படத்தை திரையிடவோ, ஒளிபரப்பவோ எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க கூடாது என்றும் சிங்கள, தமிழ் , கத்தோலிக்க, இஸ்லாமிய சமயங்களை பிரதி நிதித்துவப்படுத்தி தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று பகிரங்க வேண்டுகோளை கூட்டாக விடுத்தனர்.

இஸ்லாத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் நாளை வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாகவும் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றது.

மேல்மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா தலைமையில் கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள ஆளுநர் பணிமனையில்இடம்பெற்ற இந்த விசேட செய்தியாளர் மாநாட்டில் தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் தலைவர்களான பெளத்த மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர் கும்புருகமுவ வஜிர தேரர், கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், இந்து மதத்தை பிரதிநித்துவப்படுத்தி சிவஸ்ரீ வி.

சுப்ரமணியம் குருக்கள், சிவஸ்ரீ சிவநேச குருக்கள், கிறிஸ்தவ மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அருட் தந்தை பெனடிக் ஜோசப், இஸ்லாமிய மதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதியின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர் கலாநிதி ஹஸன் மெளலானா, தரீக்கத்துல் அரூஸியத்துல் காதிரிய்யா உலக மஜ்லிஸின் ஆன்மீகத் தலைவர் அஷ்ஷெய்க் அப்தார் தைக்கா நாஸிர் ஆலிம் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் சிறிலங்காவின் செயலாளர் அஸ்கர் ஆகியோரும் தமது கண்டனங்களைத் தெரிவித்தனர். கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம். எஸ். எம். தாஸிம் ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான இணைப்பாளர் அப்துல் காதர் மஷ¥ர் மெளலானா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை இந்த திரைப்படத்தை கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளதுடன் அன்றைய தினம் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல் முதல் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் வரை ஊர்வலமாக சென்று அமெரிக்க தூதுவரிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா தெரிவித்தார்.

அன்றைய தினம் சகல மக்களும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்ளுமாறும் சர்வமதங்களின் சார்பிலும் முஸ்லிம்களின் சார்பிலும் வேண்டுகோள் விடுத்தார்.

கும்புருகமுவ வஜிரதேரர்

இந்த திரைப்படமானது உலகில் வாழும் கோடிக் கணக்கான முஸ்லிம்கள் புனிதராக மதிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியுள்ளதுடன் மனதை நோகடிக்கச் செய்துள்ளது. அமைதியாக காணப்பட்ட முஸ்லிம் நாடுகளில் தற்போது அமைதியற்ற சூழ்நிலை காணப்படுகிறது. இதற்கு மேற்கத்திய நாடுகளே பிரதான காரணமாகும்.

ரன்முத்துகல சங்கரத்ன தேரர்

இஸ்லாத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தும் வகையில் திரைப்படத்தை தயாரித்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இதற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் மாத்திரமின்றி சகல இன மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

சிவஸ்ரீ சுப்ரமணிய குருக்கள்

இந்த திரைப்படத்தை உலக நாடுகளில் திரையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். எந்த நாடும் இதனை திரையிட அனுமதிக்க முடியாது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

சிவஸ்ரீ சிவநேச குருக்கள்

மதங்களை இழிவுபடுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதனை மதத் தலைவர்கள் என்ற வகையில் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் மக்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அருட்தந்தை பெனடிக் ஜோசப்

உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்களை பொங்கி எழச் செய்துள்ள இந்த திரைப்படம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். மதங்களுக்குரிய மரியாதை வழங்கப்பட்டு செயற்பட வேண்டும். இந்த செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கலாநிதி ஹஸன் மெளலானா

உலக சுதந்திரம் என்று மதத்தையோ, மதத் தலைவர்களையோ இழிவுபடுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அமெரிக்க ஜனாதிபதியின் அந்தரங்க வாழ்வு தொடர்பில் இழிவு படுத்தி திரைப்படம் வெளியிட்டால் அதனை சுதந்திரம் என்று கூறுவார்களா எனவே மேற்கத்திய சதித் திட்டத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

தைக்கா நாஸிர் ஆலிம்

சுதந்திரம் என்ற பெயரில் மதத்தை இழிவுபடுத்த முடியாது. இது ஒரு எதேர்ச்சையான செயற்பாடு என்று எவரும் கூற முடியாது. உலக முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு விடயமாகும். அமெரிக்காவின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா

மேற்கத்திய நாடுகள் இன்று முஸ்லிம் நாடுகளுக்கு பயந்துள்ளமையின் ஒரு வெளிப்பாடே இதுபோன்ற செயற்பாடுக ளாகும். திரைப்படம் என்பது ஏதாவது ஒரு செய்தியை, தகவலை வெளிப்படு த்துவதற்கு பயன்படுத்துவது. ஆனால் இதனை மத நிந்தனைக்கு பயன்படுத்துவது மிக மோசமான ஒன்றாகும். இந்த திரைப்படத்தை உலகில் எங்கும் திரையிட அனுமதிக்க கூடாது.

அப்துல் காதர் மசூர் மெளலானா

உத்தம நபியை இழிவுபடுத்துவதை உலகில் எந்த ஒரு முஸ்லிமும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அமெரிக்காவின் இந்த மோசமான செயற்பாட்டுக்கு மத்திய கிழக்கில் ஆரம்பித்த எதிர்ப்பு, உலகம் முழுவதிலும் முன்னெடுக்கப்படுகிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.-தகவல் தினகரன் ஸாதிக் ஷிஹான்

No comments:

Post a Comment