ஒரு தந்தையின் துயரக் கடிதம்
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஹலோ வாப்பா சுகமா இருக்குறீங்களா,
ஆம் மகள் நல்ல சுகம் சாப்பிட்டியா மகள்.......
இது என்ன என்று பார்க்கின்றீர்களா? நானும், யாழ்ப்பாணத்தில் உள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரி விடுதியில் உள்ள எனது ஒரே ஒரு மகளும் தினமும் இரவு 9.30 மணிக்கு சில நிமிடம் பேசி என் பாசத்தை அவளும் அவள் பாசத்தை நானும் கேட்டு ஆறுதல் அடைவோம் நிம்மதியாய் நித்திரை செய்வேன்.
எனக்கு விருப்பம் இல்லாது மகளின் விருப்பத்திற்கு ஏற்றா போல் அவளுக்கு தாதியாக சந்தர்ப்பத்தை இறைவன் அமைத்தான்
ஆனால் நேற்றிலிந்து என் மகளின் குரல் என் காதுகளுக்கு எட்டவில்லை. இன்று ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது அவள் வகுப்பைச்சேர்ந்த நண்பர் ஒருவர் பேசினார் ஆனால் அவர் ஒரு இந்து மதத்தைச் சேர்த்தவர். அய்யா
''உங்கள் மகள் இந்த இலக்கத்தை தந்து பேசச் சொன்னார்... இலங்கையில் எந்தவொரு தாதியர் விடுதியிலும் இல்லாத சட்டம் ஒன்று இங்கு உள்ளது. 'அதாவது phone பாவிக்கக்கூடாது. நேற்று நூற்றுக்கு மேற்பட்ட phone கள் விடுதிக்கு பொறுப்பான 'மேடம்' இனால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் உங்கள் மகளின் phone உம் உள்ளடங்கும்'' என்று கூறிய நிமிடத்தில் இருந்து என் மகள் என்னுடன் பேசும்போது ஊரிலே வந்து நிற்கும் போதும் விடுதியில் உள்ள பிரச்சனைகளை என்னிடம் கூறுவது நினைவிற்கு வந்தது. அவற்றை உங்கள் இணையத்தளத்திடம் தெரிவிக்கின்றேன். என் மகளைப் போன்று எத்தனையோ முஸ்லிம் மாணவர்கள் அங்கு வேதனை படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறர்கள்.
யாழ்ப்பான தாதியர் கல்லூரி விடுதி கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடியது, நல்லது, காரணம் உள்ளவர்கள் அனைவரும் பெண் மாணவிகள். 2012 இற்கு முதல் யாழ்ப்பான மாவட்ட மக்கள் மாத்திரிமே அங்கு தாதியர் பயிற்ச்சி பெற்றனர். 2012 இல் மட்டக்களப்பு, மருதமுனை, கல்முனை, நிந்தவூர், அக்கரைப்பற்று, சம்மந்துறை, மல்வத்த போன்ற ஊர்களில் இருந்து மாணவ மாணவிகள் தெரிவு செய்யப்பட்டு தாதியர் பயிற்சிக்காக யாழ் தாதியர் பயிற்சிக்கல்லூரிக்கு அனுமதி கிடைத்து 150 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்றனர். சென்றதில் ஒரு சில பெண் மாணவிகள் விடுதியில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் இடையில் வந்து விட்டனர்.
அந்த விடுதுதியில் நடக்கின்ற கடுமையான இன்னல்களை என் மகள் மூலமாகவும் அவளின் சக வகுப்பு மாணவரான அந்த இந்து மதத்தை சேர்ந்த மாணவர் மூலமாகவும் அறிந்து கொண்டேன் .
நடவடிக்கை எடுப்பதற்காகவே. பிரச்சினைகளை ஒவ்வொன்றாக கீழே குறிப்பிடுகின்றேன். பிரச்சனைகளை வைத்து நீங்களே தீர்மானியுங்கள் இது போலியானதா உண்மையானதா என்று. ஆனால் எமது முஸ்லிம் மாணவர்கள் பழிவாங்கப்படுவதை பாதுகாக்கும் பங்கு உங்களுக்கும் உண்டு.
1. விடுதிக்கும் கல்லூரிக்கும் அதிபராக இருப்பவர் திருமணம் ஆகாத 40 வயது தாண்டிய ஒரு பெண். திருமணத்தில் உடன் பாடு இல்லாத ஒரு பெண். அதனால் அவருக்கு குடும்ப பாசம் பிள்ளைப்பாசம் தெரியாமல் போயிற்று
2. 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்குகின்ற விடுதியில் நான்கே நான்கு மலசலகூடம், ஆண்கள் என்றால் சமாளிக்க முடியும் பெண்பிள்ளைகள் எவ்வாறு சமாளிப்பது, காலைக்கடனை முடித்து விட்டு காலை 7 மணிக்கு முதல் கல்லூரிக்கு சென்றுவிடவேண்டும்.
3. சுகாதாரத்தை பேணும் தாதியர்களுக்கு சமைத்துக்கொடுப்பது சுகாதாரமற்ற சாப்பாடினையாகும். அது நூறு வீதம் கைதிகளுக்கு சமைப்பதைப்போல சமைத்து கொடுக்கார்கழாம். இதனை சுகாதார அதிகாரிகளை விட்டு பரிசோதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. இவ்வாறு சாப்பாட்டிற்கு அல்லாடிக்கொண்டிருக்கும் மாணவிகள் பசியினை போக்க தங்களது சொந்த அறையில் தேநீர் ஊற்றி குடிக்க நீர் சுட வைத்து தங்களது பசியை போக்குவோம் என்று பார்த்தால் அங்கு ஹீட்டர் பாவிக்க கூடாதாம், சரி எல்லோருக்கும் பொதுவானா boiler இல் சுடு நீர் எடுக்கப்போனால் அங்கு காலையும் மாலையும் மட்டும்தான் அதில் சுடு நீர் இருக்குமாம்.
5. கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பயிற்சிக்காக ward பாக்கவும் செல்ல வேண்டும். ஆகவே தங்களது உடை மிக சுத்தமாக இருக்க வேண்டும். காரணம் தாதிமார். இறைவனுக்கு அடுத்த படியாக வைத்தியருக்கு முதற்படியாக நோயாளிகளுடைய உயிரை காப்பவர்கள். எனவே அவர்களின் சீருடைகளை ion செய்வதற்கு அங்கே 200 மேற்பட்ட மாணவிகளுக்கு பொதுவாக ஒரு ion box . எவ்வாறு எல்லா மாணவிகளும் தங்களது சீருடைகளை ion செய்வது? இதை சமாளிக்க மாணவிகள் தங்களது அறைக்குள் சொந்தமாக ion box பாவிக்க கொண்டு போனால் அவ்வாறு பாவிக்கத்தடை. அவற்றையெல்லாம் கைப்பற்றி விட்டார்களாம்
6. தாதிமார்கள் என்பவர்கள் தங்களது ஆசா பாசங்களை மறந்து யாரென்றே தெரியாத பல நபர்களின் உயிருக்காக இரவு பகலாக போராடுபவர்கள். ஆனால் அவர்களும் மனிதர்கள்தான். அவர்களின் மனோ நிலை தெளிவாக இருந்தால் மாத்திரமே சேவையை சரியாக செய்ய முடியும். இல்லையென்றால் வரும் நோயாளிகளுக்குத்தான் ஆபத்து அந்தவகையில் தங்கள் உறவினர்களோடு இரவில் ஒரு 5 நிமிடம் மனம் விட்டு பேசி பிரிந்திருக்கும் பெற்றோர்களின் பாசத்தை தொலை பேசியிலாவது பெறுவோம் என்று நினைத்தால் அதற்கும் விடுதியில் phone பாவிக்கத்தடை.
7. தடை இருந்தும் இரகசியமாக பாவித்து என்னைப் போல சக பெற்றோர்களின் பிள்ளைக்கும் தங்களது பெற்றோருடன் பேசி வந்தார்கள். ஆனால் அதையும் கண்டு பிடித்து மாணவிகளுக்கு இயக்கத்தில் தண்டனை வழங்குவது போன்ற தண்டனைகள் வழங்க துணிந்து விட்டனர் அங்குள்ள senior மாணவிகள். phone பாவிக்கின்ற விடயத்தில் வவுனியா தாதியர்கல்லூரியிலும் முன்னர் தடை இருந்தது ஆனால் தூர இடங்களில் இருந்து வரும் மாணவிகளின் நலன் கருதி அந்த தடை நிவர்த்தி செய்து, காலையில் கல்லூரிக்கு செல்லும் போது phone இனை மேடத்திடம் குடுத்து விட்டு புத்தகத்தில் கையொப்பமிட்டு மீண்டும் கல்லூரியை விட்டு விடுதிக்கு திரும்பும் போது புத்தகத்தில் கையொப்பமிட்டு விட்டு phone இணை மீளப் பெற்றுக்கொண்டு விடுதிக்கு தங்களது அறைக்கு செல்வார்களாம் என்று நான் விசாரித்ததில் அறிந்துகொண்டேன்.
8. நான் அக்கரைப்பற்றை சேர்ந்தவன் எனக்கு அரசியல் அறிமுகங்கள் கிடையாது. ஆனால் உங்கள் இணையத்தை தினமும் பார்வை இடுவேன். அந்தவகையில் இந்த 2012 இல் நான்காம் மாதம் ஒரு batch உம் எட்டாம் மாதம் ஒரு batch உம் யாழ் தாதியர்கல்லூரிக்கு அனுமதி பெற்றார்கள். அதில் 99 % மாணவிகள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த்த முஸ்லிம் மாணவிகள் இந்த இனக்குரோதம் அவர்களின் பழிவாங்கலின் ஆரம்பம்.
9. இவ்விரு batch இனையும் சேர்த்து 400 மாணவிகள் ஆனால் இவர்கள் செல்வதற்கு முன்பு விடுதியில் இருந்தவர்கள் வெறும் 16 மாணவிகள் மாத்திரமே. அவர்களின் தலைக்கனம் எந்த அழவுக்கேன்றால் எம் முஸ்லிம் மாணவிகளை அவர்களின் காலில் விழுந்து வணங்கச் சொல்லும் அழவிற்கு ஏறிவிட்டது.
10. இந்த 16 senior மாணவிகளும் கல்வியில் பின்னடைவாக இருந்துள்ளனர். ஆனால் சென்ற எமது முஸ்லிம் மாணவிகள் மிக கெட்டித்தனமான வெளிப்பாட்டினை காட்டியாதால் அந்த 16 மாணவிகளுக்கும் விருவுரையாளர்களின் சாடல் விழுந்ததால் கோபம் கொண்ட அவர்கள் எமது மாணவிகளை துரத்தி துரத்தி dragging செய்துள்ளனர். இந்த பிரச்சினையினை விரிவுரையாளர்களிடம் எமது மாணவிகள் தெரவித்த போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதன் பழிவாங்கலாக விரிவுரையாளர்களுக்கு தெரியாத வகையில் துன்புறுத்தி வருகின்றனர். ஆனால் இச்செயட்பாடுகளுக்கு அதிபரும் உடந்தையாக இருக்கின்றார் என எனது மகள் அங்குள்ள நிலவரத்தை வைத்து கூறினார். இவ்வாறு என் மக்களைப்போன்று சக மாணவர்களும் வெளியே சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். காரணம் வந்து விட்டோம் பெற்றோரை திருப்திப் படுத்த வேண்டும் என்பதற்காக
11.லீவு கொடுப்பதிலும் தில்லுமுல்லு. அதாவது தமிழ் சிங்கள புதுவருடத்திற்கு ஏழு நாட்கள் விடுமுறை. எமது இஸ்லாம் சமய பெரு நாட்களுக்கு சம்பளமற்ற விடுமுறை.
12. இப்பிரச்சினைகளை இப்படியே விட்டால் அந்த விடுதி தாதியர் விடுதி என்றில்லாமல் புலிகள் இயக்க விடுதியாக மாறிவிடும். எனவே எனது e mail இணை தட்டிக்களித்து விடாமல். மனித உரிமைகள் ஆணைக்குழு சுகாதார அமைச்சு போன்ற இடங்களுக்கு அறிவித்து எமது முஸ்லிம் மாணவிகளை பாதுகாருங்கள்.
ஒரு வேளை உங்களின் சகோதரிகள், மகள் மார் கூட அங்கு இருக்க கூடும். எனவே முதலில் யாழ் தாதியர் கல்லூரி ஆண் மாணவர்களை தொடர்பு கொண்டு விசாரித்து பாருங்கள். கல்லூரி அதிபரை தொடர்பு கொண்டு என்னென்ன கட்டுப்பாடு நிபந்தனைகள் விடுதிக்கு உள்ளது என்பதை விசாரித்து பாருங்கள். உண்மை புரியும் உங்களுக்கும். விசாரிப்பதோடு மட்டும் நின்று விடாமல் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யுங்கள்.
என் அருமை மகளின் குரலை ஒரு நாள் கூட என்னால் கேட்காமல் இருக்க முடியாது நான் ஒரு இருதய நோயாளி. engineer ஆக கடமையாற்றுகின்றேன். விரைவில் ஒய்வு பெறுவேன். இரத்தத்தை பார்த்தாலே அஞ்சும் எனது மகள் எவ்வாறு அந்த தொழிலை தேர்ந்தெடுத்தாள் என்பது இன்றைக்கும் எனக்கு புதிராக உள்ளது. அழுது கொண்டே என் மகளின் பாசத்திற்காக இந்த மடலை உங்கள் இணையத்திற்கு எழுதிகிறேன். எனது மகளின் முதலாம் வருட பரீட்சையின் நன்மை கருதி எனது பெயரையோ மகளின் பேரையோ குறிப்பிடவில்லை. ஆனால் குறிப்பிட்டுள்ள விடயம் அனைத்திற்கும் அந்த அல்லாஹ் ஆணை.
வஸ்ஸலாம்..

இது மிக முக்கியமான பிரச்சினை இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உரிய நடவெடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக மார்கத்திற்கு புறம்பான விடயங்களை செய்யச்சொல்லி துன்புறுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது
ReplyDelete