அமெரிக்காவில் முகமது நபி(ஸல்) அவர்களை சித்தரிக்கும் விதத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனைக் கண்டித்து இன்று அக்கரைப்பற்று பிரதேசத்தில் கர்த்தாலும் கண்டனப் பேரணியும் இடம்பெற்றது.
நன்றி (தமிழ்வின்)
அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம், வர்த்தகர்களின் சங்கம் மற்றும் அக்கரைப்பற்று மாநகரசபையின் அழைப்பு விடுத்திருந்தனர்.
இதனையடுத்து, பிரதேசத்தின் கடைகள் வங்கிகள், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் அரச அலுவலகங்கள் யாவும் செயலிழந்துள்ளதுடன் பயணிகள் போக்குவரத்துகள் எதுவும் இன்றி முழு அம்பாறை நகரமும் பஸ் நிலையங்களும் வெறிச்சோடிக் காணப்பட்டது.
இதனையடுத்து, பிரதேசத்தின் கடைகள் வங்கிகள், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் அரச அலுவலகங்கள் யாவும் செயலிழந்துள்ளதுடன் பயணிகள் போக்குவரத்துகள் எதுவும் இன்றி முழு அம்பாறை நகரமும் பஸ் நிலையங்களும் வெறிச்சோடிக் காணப்பட்டது.
அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பில் இருந்து ஆரம்பித்த இப்பேரணியில், “அமெரிக்கா ஒழிக” என பல்வேறு கேசங்கள் எழுப்பியவாறு “முகமது நபியை இழிவுபடுத்தும் வீடியோவை உடனடியாக தடைசெய்”, “இஸ்லாத்துக்கு எதிரான வன்முறைகளை நிறுத்து” போன்ற சுலோகங்கள் தாங்கியவாறு நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் அவ்வார்ப்பாட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவி இழுத்துச் சென்று அட்டாளைச்சேனை வரை சென்று அமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவியை எரித்ததுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் ஹர்த்தாலும் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி (தமிழ்வின்)







No comments:
Post a Comment