Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Tuesday, September 18, 2012

'நான் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் உள்ளேன்' - ரவூப் ஹக்கீம்



பல்லின சமூக அமைப்பைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக் கட்சியானது 14 ஆசனங்களை வெற்றி கொண்டு முன்னிலையில் திகழ்ந்தாலும் அந்த மாகாணத்தில் தொங்கு மாகாண சபையொன்றுக்கே வழி சமைத்துள்ளது.


 இலங்கை  தமிழரசுக்கட்சி 11 ஆசனங்களுடன் இரண்டாவது இடத்திலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களுடன்
மூன்றாவது இடத்திலும் வந்துள்ளன. ஐ.தே.கவுக்கு 4 ஆசனங்கள் கிடைத்துள்ளன. ஐ.ம.சு. முன்னணிக்குக் கிடைக்கும் இரண்டு போனஸ் ஆசனங்களையும் சேர்த்து மொத்தம் 14 ஆசனங்கள் வந்தால் சிறுபான்மை ஆட்சி யொன்றை அமைக்க முற்பட்டாலும் 37 அங்கத்தவர்களைக் கொண்ட சபையில் தோல்வியைத்தான் எதிர் கொள்வதாய் இருக்கும்.

இந்த நிலைமையில் அரசியலில் பேரம் பேசுதல் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டிருப்பதை சுட்டிக்காட்டத் தேவை யில்லை. எதிர்த்தரப்பு உறுப்பினர்களை தன்பக்கம் இழுத்துக் கொள்வதற்கு ஐ.ம.சு. முன்னணி பிரமுகர்கள் தாராளமாக சலுகைகளும் பணமுடிப்புகளும் வழங்குவதற்கு முன்வந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இந்தப் பின்னணியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இப்பொழுது எல்லாத் தரப்பினராலும் வருந்தி அழைக்கப்படும் விருந்தாளியின் நிலையில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.

தேர்தல் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அரச தரப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அரசியல் அமைச்சராகவிருக்கும் அவர் தேர்தலுக்குப் பின்னர் தமது அமைச்சர் பதவி குறித்து முடிவெடுக்க வேண்டியிருக்கும் என்று அமைச்சர் அழகப்பெரும போன்றவர்கள் சாடினார்கள். இப்போது மாகாணசபையில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அமைச்சர்கள் ஹக்கீமின் ஆதரவைத் தேடிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் விடுத்திருந்த அறிக்கையில் தங்கள் கட்சி மாகாணசபையில் ஆட்சியமைக்கப் போவதாகவும் அதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஐ.தே.கவும் ஆதரவளிக்கவிருப்ப தாகவும் அறிவித்திருந்தார்.

இருந்தாலும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த சிரமத்தைப் பார்க்கையில், இலங்கை தமிழரசுக்கட்சி அமைக்கக்கூடிய மாகாணசபை நிர்வாகத்தில் தமது கட்சியும் இணைந்து கொள்ளுமா என்பது பற்றி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஹக்கீம் எந்தவித உறுதிப்பாட்டையும் தெரிவித்திருப்பதாகத் தெரியவில்லை. அதே போல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் அவர் எதுவித வாக்குறுதியையும் வழங்கியிருக்கவில்லை.

 முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் எந்த அளவுக்கு அரசாங் கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அவர்கள் முடிவு அமையும் என்று தெரிகிறது.

இப்பொழுது ஏற்பட்டுள்ள குழப்பகரமான தேர்தல் முடிவுகள் நிலை மையில் கிழக்கு மாகாணத்தில் சகல கட்சிகளையும் கொண்ட கூட்டணி ஆட்சியொன்றை உருவாக்குவது பொருத்தமாய் இருக்கும் என்று அரசில் உள்ள பங்காளிக் கட்சிகளில் ஒன்றான கம்யூனிஸ்ட் கட்சி யோசனை தெரிவித்துள்ளது.

ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் அப்படியான ஓர் ஆட்சியை ஏற்படுத்தலாம் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் அமைச் சருமான டி.ஈ.டபிள்யூ குணசேகர யோசனை முன்வைத்துள்ளார். ஆனால் அப்படியான ஒரு கூட்டாட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்துக் கொள்வதற்கு பெரும் பான்மையான அரசாங்கக் கட்சி சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு விருப்பமில்லை.

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்து கொள்வதற்கு த.தே.கூட்டமைப்பு மறுத்து வருவதே இதற்குக் காரணம் என்று தெரிகிறது என்றாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள ஓர் அறிக்கையில் இது வரைக்கும் கூட்டாட்சி ஒன்றை அமைப்பது தொடர்பாக அரசு எம்முடன் பேசவில்லை.

அவ்வாறான அழைப்பு ஏதும் கிடைக்காததால் அதைப்பற்றி நாம் ஆலோசிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கூட்டத்துக்காகக் கூடியிருந்தார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மண்டபத்துக்குள் நுழைந்த போது மாபெரும் வரவேற்பு ஆரவாரம் இடம்பெற்றது.

உறுப்பினர்களைக் கைகூப்பி ஆயுபோவன் என்று ஜனாதிபதி வரவேற்றார். கட்சியை வெற்றிபெறச் செய்தமைக்காக அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். 

எல்லா மாவட்டங்களிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம் என்று கூறிய ஜனாதிபதி அங்கு ஹக்கீம் நிற்பதைப் பார்த்துவிட்டு முழுமையாக இல்லை என்றாலும் கூட்டணி என்ற முறையில் எல்லா மாவட்டங்களையும் கைப் பற்றியுள்ளோம் என்றார்.

கொமன்வெல்த் 58ஆவது வருடாந்த மாநாடு கொழும்பில் நடைபெற்ற போது, கடந்த வருடம் ஒக்ரோபரில் ஆஸ்திரேலியபேர்த்தில் நடைபெற்ற கொமன் வெல்த் தலைவர்கள் மாநாட்டில் நிராகரிக்கப்பட்ட சில பிரச்சினைகளை பேராளர்கள் சிலர் எழுப்புவதற்கு எத்தனித்தமை ராஜபக்ஷவுக்கு கவலையைக் கொடுத்திருந்தது.

அந்த விடயம் முக்கிய சில பிரமுகர்களைக் கொண்ட குழுவினரால் எழுப்பப்பட்டிருந்தது. அதன் முக்கிய ஆதரவாளர் ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற  சட்டவாளரான நீதியரசர் மைக்கப் கேர்பி ஆவார். மனித உரிமைகள் தொடர்பாக கொமன் வெல்த் ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதே அந்த விடயம். ஒருவேளை இந்த விடயம் மாநாட்டில் எழுப்பப்பட்டால் அதனை முறியடிக்கும் விதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வருகைதந்திருக்க வேண்டும் என்பது ஜனாதிபதியின் விருப்பாக இருந்தது.

ஆனால் அந்த விடயம் மாநாட்டில் எழுப்பப்படவில்லை. அது ஒரு கவலை தரும் சாட்சியாகஇருந்தது. இலங்கை அமைச்சர்கள் மேற்படி விடயத்தை ஆதரிக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளோடும் உள்ளூர் எதிர்க்கட்சித் தலைவர்களோடும் அவசியமற்ற விவாதங்களில் ஈடுபட்டிருந்தார்கள். ஏனைய மாநாட்டு உறுப்பினர்கள் அதனை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கடந்த வியாழக்கிழமை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மீண்டும் வந்தபோது அலரிமாளிகையில் ஜனாதிபதிக்கு முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து குறுகிய விளக்கம் ஒன்றை வழங்கினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தாம் சுமுகமான உறவைப் பேணி வருவதாகவும் கூறினார். அமைச்சர் குணசேகர முன் வைத்துள்ள ஆலோசனைபற்றி குறிப்பிட அவர் தவறவில்லை. ஆனால் அதில் ஜனாதிபதி அதிக அக்கறை காட்டிக் கொண்டதாகவுமில்லை.

அதே சமயம் அதனை எதிர்க்கவுமில்லை. நாம் பிரச்சினைகளை ஆராயலாம். முதலில் அமைச்சர்களுடன் ஆராயுங்கள் என்று ஜனாதிபதி கூறினார்.  அதன் பிறகு அமைச்சர்கள் பஷில் ராஜபக்ஷ, அனுரபிரிய தர்சன யாப்பா, நிமால் சிறிபாலடி சில்வா, மைத்திரி பால சிறிசேன, சுசில் பிரேமஜயந்த, டலஸ் அழகப்பெரும ஆகியவர்களுடன் ஹக்கீம் விவாதித்தார்.

ஹக்கீமின் கோரிக்கைகள்

முஸ்லிம்கள் நீண்டகாலமாக அரசுடன் உறவு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதியை இக்கட்டான நிலைமைக்குத் தள்ளிவிட நாங்கள் விரும்பவில்லை. கிழக்கு மாகாண சபை அமைக்கும் விடயத்தில் முஸ்லிம்கள் எமக்கு அமோகமானதொரு தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். அவர்களின் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். இது ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று ஹக்கீம் கூறினார். அதன் பிறகு தமது முதல் கோரிக்கையை அவர் முன் வைத்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முஸ்லிம் காங்கிரஸ் முதல் அமைச்சர் ஒருவரை நியமிக்கும் விடயத்தில் புறம்தள்ளி விட முடியாது.

 முதல் அமைச்சர் பதவியைத் தர மறுத்தமையே முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்தமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று தேர்தலுக்கான நியமனங்கள் நடைபெறுவதற்கு முன்பதாகவே இதையே முக்கிய நிபந்தனையாக முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்திருந்தது என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், எங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது. எமது சுயாதீன தனித்துவமும், பலமும் அரசுக்கு எதிரான வாக்குகளை எம்மால் பெற்றுக்கொள்ள உதவியுள்ளன.

இதனை எங்களால் பேரம்பேச முடியும் என்றார். பின்னர் இரண்டாவது கோரிக்கையை முன் வைத்தார். மத்திய அரசில் மேலும் ஒரு அமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரஸுக்கு வேண்டும் என்பதாகும் அது.

இது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அரசு விசால மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும். ஏனைய கோரிக்கைகளில் 1991ஆம் ஆண்டு முதல் வடமத்திய மாகாண சபையில் உறுப்பினராக இருந்து பணியாற்றியிருந்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கு போனஸ் உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்பதும் ஒன்று. குறிப்பிட்ட  அந்த உறுப்பினர் கடந்தவாரம் தேர்தலில் தோற்றுப் போயுள்ளார்.

அமைச்சர்கள் ராஜபக்ஷ, பிரேம ஜயந்த, அழகப்பெரும மற்றும் சில்வா ஆகியவர்கள் ஹக்கீமின் கோரிக்கைகளை கடுமையாக எதிர்த்தார்கள். இந்தச் சந்திப்பு இருதரப்புக்குமிடையில் கடும் வாக்குவாதங்களுக்கு வழி வகுத்ததாகத் தெரிகிறது. அதன் பேரில் பேச்சுக்கள் ஒரு முடிவுக்கு வந்தன.

எனது சீட்டுக்களை மேசையில் நான் விரித்து வைத்துவிட்டேன். கிழக்கு மாகாண சபைத் தேர்தலானது இம் முறை இலங்கை தமிழரசுக் கட்சியும் களம் இறங்கியுள்ளதால் சர்வதேசக் கவனத்தை ஈர்த்துள்ளது. எமக்குக் கிடைத்துள்ள தீர்ப்புக்கு நாம் அர்த்தம் கொடுத்தாக வேண்டும். அது எமது மக்களைத் திருப்திப்படுத்துவதாக இருக்கவேண்டும்.

நாம் ஓரங்கட்டப்படுகின்றோம் என்பதாக ஒரு தோற்றப்பாடு இருந்து வருகின்றது என்று ஹக்கீம் பத்திரிகைகளிடம் கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடத்தத் திட்டமிட்டிருந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்த போது பஸில் ராஜபக்ஷவிடமிருந்து அவசரமாக சந்திப்பதற்கான அழைப்பொன்று வந்தது. அவசரமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில் முக்கிய சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டதாகத் தெரிகின்றது. ஏனையவை ஜனாதிபதியுடன் பேசித் தீர்க்கப்படும்.

இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் காந்தா கொமன் வெல்த் மாநாட்டுக்கு வந்திருந்த இந்திய பேராளர்களுக்கு விருந்தளித்தார். அந்த விருந்தில் கலந்து கொண்ட ஹக்கீம் மற்றும் பிரதிநிதிகள் கலந்துரையாடினார்கள். ஹக்கீமுக்கு சங்கடம் கொடுக்கும் சில  சம்பவங்களும் அங்கு நிகழ்ந்தன. அமைச்சர் நெவின்  திஸாநாயக்க, ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் றோஸி சேனாநாயக்க முதலியவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது றோஸி கேட்டார், ஹக்கீம் எந்தப் பக்கமாக நீங்கள் போகப் போகிறீர்கள் என்று. எனக்கு இது இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை என்றார் ஹக்கீம்.

அப்போது அங்கே நின்ற சுமந்திரன், 18ஆவது அரசமைப்பு தீர்மானம் நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட போதும் இதையேதான் கூறினீர். பிறகு எதனை ஆதரித்தீர் என்றார்

No comments:

Post a Comment