பிரசவத்திற்கு இரு நாட்களுக்கு முன்னர் தனது கர்ப்பத்திலிருந்த குழந்தையை கருக்கலைப்பு செய்த தாயொருவருக்கு 8 வருட சிறைத் தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
வட யோர்க்ஷியரில் ஷெர்பேர்ன்–
இன்–௭ல்மெட் ௭னும் இடத்தைச் சேர்ந்த சாரா லூஸி கட் (35 வயது) ௭ன்ற மேற்படி திருமணமான பெண் தனது அலுவலக பணியாளர் ஒருவருடனான இரகசிய காதல் தொடர்பு மூலம் கர்ப்பமாகியுள்ளார்.
இந்நிலையில் தனது கணவரிடம் தான் கர்ப்பமடைந்துள்ளதை சாதுர்யமாக மறைத்த சாரா இணையத்தளம் மூலம் கருக்கலைப்பிற்கான மருந்துகளை பெற்று உட்கொண்டு தனது வயிற்றில் முழு வளர்ச்சியடைந்துள்ள குழந்தையை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
கருக்கலைப்பிற்கு உள்ளான நிலையில் தனது கணவருக்குத் தெரியாமல் தனது வீட்டின் குளியலறையில் இறந்த குழந்தையை பிரசவித்த சாரா லூஸி கட்இ அதனை இகசிய இடமொன்றில் புதைத்துள்ளார்.தனது கணவர் மூலம் ஏற்கனவே இரு குழந்தைகளுக்குத் தாயான சாரா முறைகேடான கர்ப்பம் ஏற்பட்டு 30 வார காலத்தில் லீட்ஸிலுள்ள மருத்துவமனையொன்றில் தனது கர்ப்பத்தை உறுதி செய்து கொண்டுள்ளார்.
பல வாரங்கள் கழிந்த நிலையிலும் சாரா தனக்கு குழந்தை பிறந்ததாக பதிவு செய்யாததால் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்திய போதே உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சாரா கர்ப்பமாக இருந்ததை அவரது கணவர் அறியாது இருந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. சாரா தன்னுடன் பணியாற்றும் சகா ஒருவருடன் 7 வருடத்துக்கு மேலாக இரகசிய காதல் தொடர்பைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் தனக்கு குழந்தை இறந்து பிறந்ததாக வாதிட்ட சாரா பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment