
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இறை தூதரை அவதூறு செய்யும் திரைப்படத்துக்கு எதிராக வடமேற்கு பாகிஸ்தானில் திங்கட்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றில்
இடம்பெற்ற துப்பாக்கிச்
சூட்டில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் பலியாகியுள்ளார்.
கைபா பகதுகைவா மாகாணத்தின் அப்பா டிக் மாவட்டத்திலுள்ள வராயில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களும் பொலிஸாரும் ஒருவருக்கொருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்திய பிரதான நகரான பெஷாவரில் மேற்படி திரைப்படத்துக்கு எதிராக 3000 க்கு மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



No comments:
Post a Comment