நேற்று மாலை வழமை போல் ஆழ் கடலில் மீன் பிடிப்பதற்காக எம்.வை.றுஸ்கின் என்பவருக்கு சொந்தமான டங்கிப் படகில் தண்டையல் (படகை வழி நடாத்துபவர்) உட்பட மூன்று பேர் மாலை 3.00 மணியளவில் கல்முனைக் கடற்கரையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவரான 55 வயதுடைய குடும்பஸ்த்தரான எம்.வை.லத்திப் (தண்டையல்) என்பவரே இவ்வாறு காணாமல் போயியுள்ளார்.
இவரை இன்று மாலை வரை கடலிலும் கரையிலும் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக கல்முனைப் பொலிஸிலும் கடற்படையினரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று இரவு 7.30 மணியளவில் கரைக்கு வந்த அப்படகில் சென்ற அஷ்ரப் (வயது 35), மற்றும் சின்னவன் (வயது 45) ஆகியோரிடம் சம்பவம் தொடர்பாக கேட்ட போது………………….
மீன் பிடித்து விட்டு அதிகாலையில் கரையை நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் போது நேரம் 4.15 அளவில் வெளிச்சம் தெரிகிறது நீங்கள் சற்று தூங்குங்கள் நான் படகை ஓட்டுகிறேன் என தண்டயல் கூற நாங்கள் உள்ளுக்குள் தூங்குவதற்காகச் சென்றோம். அப்போது திடீரென உக்கல் (பெரிய அலை) அடித்தது. உடனே வெளியே வந்து பார்த்த போது தண்டயலைக் காணவில்லை. அவ்வேளையிலிருந்து வேறு படகுகளின் உதவியுடன் தேடியும் அவரைக் கண்டு பிடிக்கமுடியவில்லை எனக் கூறினார்கள்.
இச்சம்பவம் கரையிலிருந்து கடலில் 6.4 கிலோ மீற்றர் துரத்தில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment