தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளார்.
இந்த ஆண்டில் இறுதிக்குள் பிள்ளையான் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வார் என அவரது பிரத்தியேக செயலாளரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
அதேவேளை பிள்ளையான் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவார் எனவும், சில ஊடகங்களில் வெளியான தகவல்களைப் போன்று பிள்ளையான் அரசியலிலிருந்து ஓய்வு பெறமாட்டார் எனவும் அசாத் மௌலானா உறுதியாக தெரிவித்துள்ளார்.
குறுகிய கால அடிப்படையில் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ள பிள்ளையான் விரும்பவில்லை எனவும் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு கிழக்கில் செயற்படுகின்றது என்பதனை தமிழ்; மக்கள் விடுதலைப் புலிகள் உன்னிப்பாக அவதானிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment