Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, September 19, 2012

ஈரானை இஸ்ரேல் எந்நேரத்திலும் தாக்கலாம்?: அமெரிக்க, பிரித்தானிய படைகளும் வளைகுடா நோக்கிப் படையெடுப்பு

       கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணையின் ஊடாக தினசரி 18 மில்லியன் மசகெண்ணெய் பெரல்களைக் கப்பல்கள் கொண்டுசெல்கின்றன.
இந்த வழியைத் தடைசெய்யப்போவதாக  ஈரான் பல மாதங்களாக எச்சரித்து வருகின்றது. இதன்மூலம் உலக நாடுகள் பலவற்றினை
ஸ்தம்பிக்க வைக்கமுடியுமென ஈரான் கருதுகின்றது.
இந்நீரிணையூடான வழியை மூடுமானால் ஈரான் மீது தாக்குதல் நடத்த உலகநாடுகள் பல தயாராகவுள்ளன.
ஈரான் மீது இஸ்ரேல் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுவதால் இப்பாதையை ஈரான் தடைசெய்யலாம என்ற அச்சம் உலகநாடுகள் பலவற்றுக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாகவே உலகநாடுகள் பலவற்றின் படைகள் அப்பகுதியில் நிலைகொள்ளத்தொடங்கியுள்ளன. அவை அங்கு கூட்டாகப் போர் ஒத்திகைகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிகின்றது.
ஈரானிடம் அதிநவீன தொழில்நுட்பங்கள் இல்லாதபோதிலும் சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல்கள், அதிவேக தாக்குதல் படகுகள் போன்றவற்றின் மூலம் அமெரிக்க மற்றும் பிரித்தானிய கப்பல்களை அது தாக்கலாம் என நம்பப்படுகின்றது.
இதேவேளை ஈரான் அடுத்தமாதம் வரலாறு காணாத மிகப்பெரிய போர் ஒத்திகை நடவடிக்கையொன்றை நடத்தவுள்ளதாகத் தெரியவருகின்றது.
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுமானால் இஸ்ரேலில் ஒன்றுமே எஞ்சாது என அந்நாட்டின் புரட்சிகரப் படையின் கட்டளைத் தளபதி  ஜெனரல் மொஹமட் அல் ஜபாரி எச்சரித்துள்ளார்.






No comments:

Post a Comment