Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, September 19, 2012

வீட்டிற்கு முன்னால் இனந்தெரியாத ஆயுதபாணிகள் துப்பாக்கியுடன் நடமாடினர்: மாகாணசபை உறுப்பினர் கலையரசன்

   அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசனின் வீட்டிற்கு முன்னால் இருவர், சந்தேகத்துக்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் நடமாடியதாக த.கலையரசன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் தமிழ் தேசிய
கூட்டமைப்பில்

அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாணசபை உறுப்பினராக நாவிதன்வெளியைச் சேர்ந்த தவராஜா கலையரசன் தெரிவானார்.

நேற்றிரவு இரவு 7.30 மணியளவில் தான் வீட்டில் இருந்தபோது  வீட்டின் முன்னாலுள்ள வீதியில் இருவர், சந்தேகத்துக்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் நடமாடியதாகவும் அவர்களை பொதுமக்கள் நெருங்கியபோதே அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளதாகவும் கலையரசன் தெரிவித்தார்.

மாகாணசபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் தொடர்ந்து விடுக்கப்படும் கொலை அச்சுறுத்தலை அடுத்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். தனக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு பலமுறை கோரியும் இதுவரை பாதுகாப்பு வழங்கவில்லை எனவும் இதனால் தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் பொலிஸாரே பொறுப்பு எனவும் த.கலையரசன் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கில்  மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட தனது உறுப்பினர்கள் பலருக்கு அச்சுறுத்தல்கள்  விடுக்கப்பட்டு வருவதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது 

No comments:

Post a Comment