Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Sunday, September 16, 2012

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம்: அமெரிக்கர்களுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை


நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட சினிமா படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய கிழக்கு நாடுகளில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரிக்கா தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். லிபியாவில் தூதரக அதிகாரி உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

ஏமனில் நடந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். இது போன்று சூடான், துனிசியா உள்பட பல நாடுகளில் அமெரிக்க தூதரங்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கும் பங்குள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்கள் மீது மேலும் தீவிர தாக்குதல்கள் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக அரோபிய தீபகற்பத்தில் தாக்குதல் நடத்த தங்கள் ஆதரவாளர்களுக்கு உத்தர விட்டுள்ளனர்.

எனவே, அந்த நாடுகளுக்கு அமெரிக்கர்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள தங்களது தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை காப்பாற்ற தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும்படி சூடான் மற்றும் துனிசியாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

சூடானில் உள்ள கார்போம் நகரில் அமெரிக்க தூதரகம் உள்ளது. அங்கு நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே, அங்கிருக்கும் ஊழியர்களை காப்பாற்ற சிறப்பு அதிரடிபடையை பாதுகாப்புக்கு அனுப்பும்படி அமெரிக்கா விடுத்த கோரிக்கையை சூடான் நிராகரித்தது. எனவே அங்கிருந்து தங்களது தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற அமெரிக்கா உத்தர விட்டுள்ளது. இதே போன்று ஏமன் அருகேயுள்ள துனிசியாவில் இருந்தும் ஊழியர்கள் வெளியேற்றப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment