Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Sunday, September 16, 2012

அமெரிக்க திரைப்படத்துக்கு அமைச்சர் ரிஷாத் கடும் கண்டனம்

இஸ்லாத்தையும் எமது தலைவர் முஹம்மத்(ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களையும் அவதுாறுக் குட்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள திரைப்படம் முஸ்லிம்களின் உணர்வுகளை சீற்றமடையச் செய்துள்ளதாகவும், இவ்வாறான ஈனச் செயல்கள் வன்மையான கண்டனத்துக்குரியதாகும் என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இவ்வாறான செயல்களுக்கு முஸ்லிம் நாடுகள் தமது கடும் எதிர்பை வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


கடந்த சில வருடங்களுக்கு முன்னராகவும் முஸ்லிம் பெயர்களை கொண்டவர்களை துண்டி இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை திணிக்கும் நுால்கள் வெளியிடப்பட்ட போது, அதற்கெதிராக முஸ்லிம் நாடுகளும், சமூகமும் தமது கடமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்த போதும்,மீண்டும் தமது நோக்கத்தை அடைந்து கொள்ளும் விதத்தில் தோல்விகண்ட இஸ்ரேலியத்தின் சக்திகள் மீண்டும் முஸ்லிம்களை புன்படுத்தும் வகையில் இவ்வாறான படுமோசமான மத நிந்தனைப் போக்குகளை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளமையை அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் குறிப்பி்ட்டுள்ளார்.

உலகலாவிய முஸ்லிம் எழுச்சியின் பாலும்,சத்திய சன்மாரக்க இஸ்லாத்தின் பால் மக்களின் வருகை அதிகரித்துவருவதாலும்,அதனை தாங்கிக் கொள்ள முடியாத பிற்போக்கு சுயநல சக்திகள், இறைதுாதர் முஹம்மத் (ஸல்) அலைஹிவஸல்லம் அவர்களை அவமானப்படுத்தி,இஸ்லாத்தினை மலினப்படுத்த எடுக்கும் இந்த கொடுமையினை ஒரு போதும் இலங்கை முஸ்லிம்களும் அனுமதிக்கமாட்டார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் முஸ்லிம் தேசத்துடன் இணைந்து தாமும் இந்த கண்டனத்தை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment