கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக் குழுத் தலைவராக மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமின் விசேட பணிப்புரையின் பிரகாரம் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி எம்.பி. இந்த நியமனத்தை செய்துள்ளார்.
இவரது நியமனம் குறித்து கட்சியின் செயலா
இவரது நியமனம் குறித்து கட்சியின் செயலா
ளர் நாயகம் ஹசன் அலி, கிழக்கு மாகாண சபையின் பேரவைச் செயலாளர் கருணாகரனுக்கு அறிவித்துள்ளார்.
மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு தலைமை வகிப்பது மற்றும் அவர்களை வழிநடாத்துதல், சபாநாயகர் தலைமையிலான கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மு.கா.வை பிரதிநிதித்துவம் செய்து பங்கேற்று தீர்மானங்களை மேற்கொள்ளுதல், பிரேரணைகளை சமர்ப்பித்தல் உள்ளிட்ட கட்சி சார்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் எமது கட்சிக் குழுத் தலைவரான ஜெமீல் பொறுப்பாக இருப்பார் என்று கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.

No comments:
Post a Comment