கிழக்கு மாகாணத்தில் இன்று மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக மட்டக்களப்பு மற்றும் கிண்ணியா பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 100 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு, படுவான்கரை,
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 75 வீடுகள்,
மேற்படி மினி சூறாவளி காரணமாக முற்றாக சேதமடைந்துள்ளதுடன்,
அப்பகுதியைச் சேர்ந்த மரங்களும் முறிந்து விழுந்துள்ளதால் பிரதேசத்தின் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
37ஆம் கொலனி, புதுமுன்மாரிச்சோலை, மாலையர்கட்டு, சின்னவட்டை, விளாந்தோட்டம் கிராமங்களைச் சேர்ந்த 75 வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன என்று பிரதேச தவிசாளர் சிறிதரன் தெரிவித்தார். இதேவேளை, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மனியரசங்குளம், வட்டமடு ஆகிய பிரசேங்களில் இன்று மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக 25க்;கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
மாலை 5.00 மணி தொடக்கம் 5.25மணி வரையான சுமார் 25 நிமிடங்கள் மழையுடன் கூடிய இந்த சுழல் காற்றினால் சேனைப் பயிர் செய்து வாழ்வோரின் வீடுகளே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று பிரதேச செயலகம் தெரிவித்தது.
No comments:
Post a Comment