கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற சிங்காரவேலு தண்டாயுதபாணி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சும்பந்தன் தலைமையில் சற்றுமுன்னர் திருகோணமலையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சுரேஸ் பிரேமசந்தின், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்தன், ஆனந்தசங்கரி ஆகியோரைத் தவிர தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சீ.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாணசபை கல்வி அமைச்சின் முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment