Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 26, 2012

பர்மாவில் மீண்டும் கலவரம் : 13 முஸ்லிம்கள் படுகொலை, 300 வீடுகள் எரிப்பு……………!!

மியான்மரில் பயங்கரவாத “புத்த தீவிரவாதிகள்” முஸ்லிம்களுக்கெதிரான இனக்கலவரத்தை மீண்டும் துவக்கிவிட்டனர்,

மேற்கு மியான்மர் மாநிலமான, ராகேனில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் “மாமர” மற்றும் “மரோத்” ஆகிய
இரு ஊர்களில் உள்ள அனைத்து வீடுகளையும் புத்த தீவிரவாதிகள் “தீ” வைத்து கொளுத்தினர்,
இதில், முன்னூறு வீடுகள் எரிந்து சாம்பலானது.

இது தவிர கடந்த 21.10.12 முதல், 3 நாட்களாக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களில் 13 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்,

என்றாலும், ராகேன் மாநில தலைமை நீதிபதி “ஹலாதீன்” அறிவிப்பின்படி, ஒரு பெண் உட்பட 3 நபர்கள் மட்டும் கொல்லப்பட்டதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது,

பாகிஸ்தான் மற்றும் ஈரான் செய்தி நிறுவனங்களின் தகவல்படி, கடந்த 21.10.12 அன்று ராகேன் மாநிலத்தின் “சதீவா” மாவட்டம் “மாமர” மற்றும் “மரோத்” ஆகிய ஊர்களில் “புத்த பிட்சுகள்” நடத்திய தாக்குதலில் மட்டும் 11 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்,

இந்த தாக்குதலுக்கு மியான்மர் ராணுவம் மற்றும் செக்யூரிட்டி படைகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன,

முன்னதாக கடந்த ஜூன் மாதம் துவங்கி பல நாட்களாக நடத்தப்பட்ட கலவரங்களில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டனர்,

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தபோது, உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக கூறியது மியான்மர் அரசு.

தற்போதைய கலவரத்தால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வீடிழந்து வீதிகளில் நிற்பதாக, மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment