Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, October 25, 2012

அரச நிறுவனங்களில் மொழிப் பிரச்சினையை ௭திர்நோக்குவோர் 1956 க்கு அழையுங்கள்

அரச நிறுவனங்களில் மொழி தொடர்பான பிரச்சினைகளை ௭திர்நோக்கும் மக்கள் தமது பிரச்சினைகளை முறையிடுவதற்கு தேசிய மொழிகள் சமூக நல்லிணக்க அமைச்சு துரித அழைப்புச் சேவையான 1956 ௭னும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறையிட முடியுமென அமைச்சின் ஊடகச் செயலாளர் மகேந்திர ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.


அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் தமது சொந்த ம
ொழியில் கருமங்களை ஆற்றுவதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமென கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அத்துடன் அரசியலமைப்பில் சிங்களம், தமிழ் ௭ன்பன நிர்வாக மொழிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ௭னினும் தலைநகரிலும் மாகாண மட்டத்திலும் அதிகமான அரச நிறுவனங்களில் பொதுமக்கள் தமது கருமங்களை முடித்துக் கொள்வதில் மொழி பெரும் தடையாகவுள்ளது.

இதனால் பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் முடிக்க முடியாதுள்ளது. இப்பிரச்சினைகளை தீர்க்க தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சில் தேவையான மொழி பெயர்ப்பாளர்கள் இருந்தும் அரச நிறுவனங்கள் ௭ம்முடன் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெற முயலவில்லையெனவும் தெரிவித்துள்ளார்

இதேவேளை பொதுமக்கள் பயணம் செய்யும் பொது போக்குவரத்துக்களில் தமிழ், சிங்கள மொழிகளில் அமையும் இடம் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப் பட்டுள்ளதுடன் அரச நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளும் மும்மொழிகளில் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதனை மீறுவோருக் கெதிராக நடவடிக்கையெடுக்குமாறு பொலி சாருக்கு பணிப்புரை வழங்கப் பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் .

No comments:

Post a Comment