Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 24, 2012

மாடி விட்டு மாடி தாவும்போது விபரீதம்.முகத்தில் 21 தையல் போடும் அளவுக்கு சூப்பர்மேன் படுகாயம்.

மாடிக்கு மாடி தாவும் சூப்பர்மேன் ஒருவர், தப்பு கணக்கால் தவறி விழுந்தார். இதில் முகம் சிதைந்தது. 34 பிளேட் பொருத்தப்பட்டு, 21 தையல் போட்டு முக எலும்புகளை இணைத்திருக்கின்றனர்.


சுவீடனை சேர்ந்தவர் ராபர்ட் ஸ்டாப்சிங். பல அடுக்கு மாடிகள் கொண்ட உயரமான கட்டிடத்தில் இருந்து பக்கத்தில் இருக்கும் உயரம் குறைந்த மாடிகளுக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிச் சென்று தாவி குதித்து சாகசம் செய்வதில் வல்லவர்.

சமீபத்தில் இதேபோல் ஒரு சாதனை நிகழ்த்த முடிவு செய்தார். ஏராளமான ரசிகர்கள், கேமராமேன்கள் அவரது சாகசத்தை காண கூடினர். திட்டமிட்டபடி ராபர்ட் உயரமான கட்டிடத்தில் இருந்து அருகில் இருந்த கட்டிடத்துக்கு தாவினார்.

எதிர்பாராதவிதமாக, அவரது கணக்கு தப்பாகிவிட்டது.

அருகே உள்ள கட்டிடத்துக்கு பதிலாக, நடுவே இருந்த இடைவெளியில் பாய்ந்தார். தாவிய வேகத்தில் அவரது முகம் சுவரில் மோதியது. தரையில் விழுந்து படுகாயம் அடைந்ததில் அவரது முகம் சிதைந்துவிட்டது.

அதிர்ஷ்டவசமாக பலத்த காயங்களுடன் உயிர்தப்பினார் ராபர்ட். மயக்க நிலையில் இருந்த அவரை உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவசரமாக அறுவை சிகிச்சை நடந்தது. முகத்தில் எலும்புகள் நொறுங்கியதால் அதை டைட்டானியம் பிளேட்கள் மூலம் இணைத்தனர்.

இதற்காக 19 டைட்டானியம் பிளேட், 38 ஸ்குரூ பயன்படுத்தப்பட்டது. 21 தையல்கள் போடப்பட்டன. இதில் 14 தையல்கள் கிழிந்து தொங்கிய உதட்டிற்கு போடப்பட்டது.

காதுகளில் 30 முதல் 50 இடங்களில் ஒட்டு வேலைகள் செய்தனர். நெஞ்சை பதற வைக்கும் பரிதாப சாகச காட்சி யூ-டியூபிலும் வெளியானது.


<iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/NLKqm8l9Uvk" frameborder="0" allowfullscreen></iframe>

No comments:

Post a Comment