Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, October 18, 2012

பரீட்சைக்கு 7 நாட்களுக்கு முன் தனியார் வகுப்புகளுக்கு தடை – கல்வியமைச்சு அறிவிப்பு

தேசிய மட்டப் பரீட்சைகள் நடைபெறும் திகதிக்கு ஏழு தினங்களுக்கு முன்னதாக மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், ரியூஷன் வகுப்புகள் நடத்துவது தடை செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையிலிருந்து இந்த புதிய நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரதான பரீட்சைகள் நடைபெறும் திகதிக்கு ஏழு தினங்களுக்கு முன்னதாக மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், ரியூஷன் வகுப்புகள் நடத்துவது தடை செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரணதர பரீட்சையிலிருந்து இந்த புதிய நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல் நடைபெறும் தினத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்னதாக பிரசார நடவடிக்கைகள் யாவும் நிறுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறையைப் போன்றே பரீட்சை நடைபெறும் திகதியிலிருந்து ஏழு தினங்களுக்கு முன்னதாக சகல மேலதிக வகுப்புகள், ரியூஷன் வகுப்புகள், கருத்தரங்குகள் யாவும் நிறுத்தப்பட வேண்டும்.

இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிடும் என்றும் குறிப்பிட்டார். 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை போன்றவை இப்புதிய நடைமுறைக்கு உள்வாங்கப்படுகிறது.

பரீட்சையொன்று நடைபெறுவதற்கு முதல் நாள் கூட சிலர் விசேட ரியூஷன் வகுப்புகள் நடத்துகின்றனர். பரீட்சைக்கு வரும் வினாக்கள் பற்றி எதிர்வு கூறுதல், வினாத்தாள்கள் வெளியாகி விட்டன. அவை பற்றி அறிந்து கொள்ள எங்களை அணுகுங்கள் என பலரும் பிரசாரம் செய்து மாணவர்களை திக்குமுக்காட வைகின்றனர். இல்லையேல் வினாத்தாள் வெளியாகிவிட்டது என்ற பொய்ப் பிரசாரத்தை செய்கின்றனர். வருடக்கணக்காக கல்வி கற்று பரீட்சைக்கு ஆயத்தமாகும் மாணவனை ஒரு சில தினங்களில் குழப்பி விடுகிறார்கள்.

மேலதிக வகுப்புகள், ரியூஷன் வகுப்புகள், கருத்தரங்குகள் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து ஒரு வாரம் வீட்டிலிருந்து அமைதியான முறையில் பரீட்சைக்கு ஆயத்தமாவதற்கு சந்தர்ப்பம் அளிக்கும் நோக்கத்திலும் இப்புதிய நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்படுகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார். கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment