Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Thursday, October 18, 2012

கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது வழங்கும் விழா


கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதுக்காக 9கலைஞர்கள் தெரிவு கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது வழங்கும் நிகழ்வு இன்று 18 ஆம் திகதி திருகோணமலையில் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெறவுள்ளது.


கிழக்கு மாகாண கல்விப் பண்பாட்டு திணைக்களத்தினால் 2012 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் விருது பெறுவதற்கென மாகாணத்தைச் சேர்ந்த ஒன்பது முஸ்லிம், தமிழ் கலைஞர்கள் த
குதி பெற்றுள்ளனர்.

இதன்படி, (கவிதை), கோஸ்முகம்மது அப்துல் அஸீஸ், 91/19, கல்யாண வீதி, சாய்ந்தமருது – 11. (கலைத்துறை), முஹம்மது ஹனிபா முஹம்மது புஹாரி, பைத்துல் பரக்கத், காத்தான்குடி – 04. (இலக்கியம்), பக்கீர் முகைதீன் கலந்தர்லெப்பை கவிதாலயம், அட்டாளைச்சேனை. (கவிதை), அப்துல் மஜீது முகம்மது அலி, அட்டப்பனார் வயல், கிண்ணியா – 05. கணபதிப்பிள்ளை பாக்கியராசா, 519, பொன்னையா வீதி, பெரிய நீலாவணை – 01. (இலக்கியம்), ஆறுமுகம் தங்கராசா, வேளாளர் வீதி, ஆரையம்பதி – 03. (சிறுகதை), கணபதிப்பிள்ளை சபாரெத்தினம், 177 ஏ, 6 ஆம் குறுக்குத் தெரு, செல்வாநகர், ஆரையம்பதி – 02. (பல்துறை), பேரம்பலம் கனகரெத்தினம், 95, கல்லூரி வீதி, திருகோணமலை. (கவிதை), வேலுப்பிள்ளை நாகராஜா சந்திரகாந்தி, 572, ஏ. ஏகாம்பரம் வீதி, திருகோணமலை. (சிறுகதை) ஆகிய ஒன்பது பேரே இம்முறை முதலமைச்சர் விருதினைப் பெறுகின்றனர்.

இன்று பி.ப. 2.30 மணிக்கு முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் திருமலையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் விமலவீர திசாநாயக்க, ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி. ௭ம். ௭ச். அபே குணவர்தன உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

No comments:

Post a Comment