கட்சியில் இருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடிதம் மூலம் உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுத்துள்ளது.
கட்சியின் செயற்குழு கூடி குறித்த நபர்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும் என ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ
அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் அரசியல் யாப்பை மீறி செயற்பட்டுவரும் ரணில் விக்ரமசிங்க குறித்து தூதரகங்களுக்கு முறையிடப்படும் என கட்சியின் இருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐதேக தென் மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (18) ஹைட்பார்க் மைதானத்தில் இடம்பெற்ற சரத் பொன்சேகா தலைமையிலான கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாதென ஐதேக செயற்குழு தீர்மானம் அறிவித்தது.
எனினும் தீர்மானத்தை மீறி கூட்டத்திற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித தெவரப்பெரும, பாலித ரங்கே பண்டார, அசோக்க அபேசிங்க மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான மைத்திரி குணரத்ன, ஷிரால் லக்திலக ஆகியோரின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 15 பேரின் கட்சி உறுப்புரிமையும் தற்காலிகமாக பறிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment