Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 10, 2012

என்னை தோற்கடிப்பதற்கு சதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன – சுபைர்

நண்பன்.
ஒரு மாகாண சபை உறுப்பினர் பதவிக்காக கோடிக்கணக்கான ரூபா பணத்தினை சில அரசியல் வாதிகள் கிழக்கு மாகாண சபை தேர்தலில் செலவு செய்தனர் ஆனால் இது என்னைப்போல ஏழை அரசியல் வாதிகளுக்கு எட்டாக்கணியாகுமென கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபையின் தற்போதய பிரதி தவிசாளருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூரில் வறுமைக் கோட்டின
் கீழுள்ள குடும்பங்களை சேர்ந்த சிறுவர்களுக்கு பால்மா பக்கட்டுக்களை வழங்கி வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் சுபைர் மேற்கண்டவாறு கூறினார்.

நேற்று ஏறாவூரின் ஐயங்கேணி கிராமத்தில் கிராம அபிவிருத்திச் சங்கத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய மாகாண சபை பிரதி தவிசாளர் சுபைர், நடை பெற்று முடிந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் என்னை தோற்கடிப்பதற்கு எனக்கெதிரான சதி நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன.

என் மீது சேறு பூசும் வகையில் விசமத்தனமான பிரச்சாரங்கள் எல்லாம் மேற் கொள்ளப்பட்டன. என்றாலும் இறைவனின் நாட்டத்தினால் அவைகள் எல்லாம் முறியடிக்கபட்டு இறைவன் மீண்டும் என்னை மாகாண சபை உறுப்பினராக்கினான்.

இதற்கு ஏறாவூரை விட கல்குடா மக்களும் காத்தான்குடி மக்களும் அதிக பங்களிப்பு செய்துள்ளார்கள். எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மசூறா அடிப்படையிலான முடிவுக்கேற்ப எனது வெற்றியும் உறுதிப்படுத்தப்பட்டு நானும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டேன்.

கடந்த காலங்களில் நான் மாகாண சபை உறுப்பினராகவும் சுகாதார அமைச்சராகவும் இருந்து இந்த ஏறாவூர் பிரதேசத்திற்கு கணிசமான அபிவிருத்தி பணிகளை மேற் கொண்டுள்ளேன்.

ஆனால் அவைகளுக்கு ஏற்ற வகையில் இந்த ஏறாவூர் பிரதேச மக்கள் எனக்காக நடை பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் பங்களிப்பு செய்ய வில்லை.

எனினும் எனது பணியினை நான் தொடர்ந்து இந்த பிரதேசத்திற்கும் செய்வேன். எறாவூர் மக்கள் நான் செய்த சேவைகள் அபிவிருத்திகளை மறந்து சிலரின் கொடுப்பனவுகளுக்கு அடிபணிந்து செயற்பட்டதை பார்த்த போது நான் வேதனைப்பட்டேன்.

ஒரு மாகாண சபை உறுப்பினர் பதவிக்காக கோடிக்கணக்கான ரூபா பணத்தினை சில அரசியல் வாதிகள் கிழக்கு மாகாண சபை தேர்தலில் செலவு செய்தனர் ஆனால் இது என்னைப்போல ஏழை அரசியல் வாதிகளுக்கு எட்டாக்கணியாகும்.

இவற்றுக்கு மத்தியில் என்னை இறைவன் மீண்டும் மாகாண சபை உறுப்பினராக்கியுள்ளான்.

இதன் மூலம் எனது பணியினை தொடர்ந்து செய்வேன் என அவர் மேலும் தெரிவித்தார். இதன் போது 330 பிள்ளைகளுக்கு பால்மா பக்கட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டன.

No comments:

Post a Comment