Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 19, 2012

பாபர் மசூதியை கட்டவிட மாட்டோம் - உமாபாரதி ஆவேச பேச்சு................!!

பாபர் மசூதியை ராமஜென்மபூமி என சர்ச்சைக்கு உள்ளாக்கிவிட்டதால், புதிதாக பொறுப்பேற்றுள்ள உத்தரபிரதேச அரசு, சுமூகமான ஒரு நிலைக்கு முயற்சிப்பதாக, ஊகங்கள் அடிப்படையில் இந்துத்துவா தீவிரவாதிகள் பேசி வருகின்றன, குறிப்பிட்ட 70 ஏக்கர் நிலத்தை விட்டுவிட்டு, அதன்
அருகில் உள்ள ஒரு இடத்தில் மசூதி கட்டும் நிலத்தை முலாயம் சிங் தேடி வருவதாக
, அவர்கள் சொல்கின்றனர்.

இது தவிர, அலகாபாத் கட்டப்பஞ்சாயத்து (கோர்ட்) தீர்ப்பு மூலம், முஸ்லிம்களுக்கு கிடைக்கப்பெற்ற 3ல் ஒரு பகுதி நிலத்தில் "தோட்டம்" அமைத்து பராமரிக்கும் திட்டம் உள்ளதாகவும் "வதந்திகள்" கசிய விடப்படுகிறது,

இதில், முஸ்லிம்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், யூகங்களுக்கு பதிலளிக்க தேவையில்லை என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் அமைதி காத்து வருகின்றனர்.

இந்நிலையில் தான், ஹிந்துத்துவா சக்திகள் தொடர்ந்து அனல்கக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,

கங்கை நதி பாதுகாப்பு யாத்திரை மேற்கொண்டுள்ள பா.ஜ.க.வின் உமா பாரதி, நேற்று "காஸ்கஞ்" பகுதியில் அமைக்கப்பட்ட மேடையில் மததுவேஷ கருத்துக்களை கொட்டி தீர்த்தார்.

அங்கு பேசிய உமாபாரதி, எக்காரணம் கொண்டும், ராமஜென்மபூமியை சுற்றியுள்ள எந்த பகுதியிலும் மசூதி கட்டுவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்,என்றார்.

ராமர் கோவில் விவகாரம் அரசியல் ரீதியாக பலவீனமடைந்து விட்ட போதிலும், அதை பற்றி எனக்கு கவலை இல்லை.

ராமஜென்மபூமிக்கு அருகாமை பகுதிகளில் மசூதி உருவாவதை என்ன விலை கொடுத்தேனும் தடுப்போம், என்றார், உமாபாரதி.

No comments:

Post a Comment