Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 19, 2012

வறுமை ஒழிப்பு நிதி ஏற்படுத்த 1000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் குவைத் ஆலோசனை...............!!

ஆசிய நாடுகளிலும் வளைகுடா பகுதியிலும் வறுமையை ஒழிக்கும் விதமாக இரண்டு 2 பில்லியன் டாலர்கள் வறுமை ஒழிப்பு நிதி ஏற்படுத்த குவைத் ஆலோசனை கூறியுள்ளது,


குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபா இதற்கான ஆலோசனையை அளித்ததுடன் குவைத் இதற்காக சுமார் 300 மில்லியன் டாலர் பங்களிப்பு அளிக்கும் என்றும் கூறியுள்ளார்,

ஆசிய ஒத்துழைப்பு குழுமத்தின் முதலாவது கருத்தரங்கு (First Asia Co operation Dialogue Summit) செவ்வாயன்று குவைத்தில் நடந்த போது கருத்தரங்கைத் தொடங்கி வைத்த குவைத் மன்னர் இவ்வாறு கூறினார்.

"ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற வளர்ச்சிப்பணித்திட்ட அமைப்புகள் இதனை மேற்பார்வையிட்டு, தேவைப்படும்போது வளர்ந்துவரும் ஆசிய நாடுகளின் திட்டங்களுக்கு இதன்மூலம் உதவமுடியும் " என்றார் அவர்.

தாய்லந்தில் கடந்த 2002ல் தொடங்கப்பட்ட ஆசிய ஒத்துழைப்பு குழுமம் 32 நாடுகளை உறுப்பினர்களாகப் பெற்றுள்ளது. சீனா, ஜப்பான், இந்தியா, தென்கொரியா உட்பட எண்ணெய்வள நாடுகள், ஈரான், ரஷியா ஆகியவை இதன் உறுப்பினர் பட்டியலில் உள்ளன.

ஆசிய நாடுகளிடையே ஆற்றல் விநியோகம், உணவுப் பாதுகாப்பு, திட்ட முதலீடுகள், தகவற் தொழிற்நுட்பவியல், மனித வள மேம்பாடு ஆகியவை குறித்து இக்கருத்தரங்கு விவாதித்தது.

No comments:

Post a Comment