Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 19, 2012

இந்தியாவிற்கு கின்னஸ் சாதனை...............!!

 45,000 மாணவர்களுடன் உலகின் மிகப் பெரிய பள்ளிக்கூடம்..............!! 

53 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டபோது ஐந்தே ஐந்து மாணவர்கள் தான் படிக்க வந்தார்கள்,

ஆனால், அது தான் இன்றைக்கு உலகின் மிகப்பெரிய பள்ளிக்கூடம். இந்தியாவின் லக்னவ் நகரில் உள்ள The City Montessori School என்கிற அந்தப் பள்ளிக்கூடத்தில் இன்றைக்கு 45,000 மாணவர்கள், 2,500 ஆசிரியர்கள், 1,000 வகுப்பறைகள். உலகின் சாதனைப் பதிவு நூலான கின்னஸ் சாதனைகள் புத்தகம் இத்தகவலை உறுதிபடுத்தியுள்ளது,

கடந்த 2010/2011 கல்வியாண்டில் இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள் 39,437 பேர், இந்த வருடம் எண்ணிக்கை 45,000 த்தையும் கடந்துவிட்டது. இந்தப் பள்ளி நகரில் 20 இடங்களில் பரவியுள்ளனவாம்,

1959ல் வெறும் 300 ரூபாய்கள் கடன்பெற்று தன் மனைவியுடன் இந்தப் பாடசாலையைத் தொடங்கியவர் ஜக்தீஷ் காந்தி. "எங்களின் இந்த வளர்ச்சி, எங்களின் சேவை முயற்சிகளுக்கும், பிள்ளைகளின் கல்வி குறித்த பெற்றோர்களின் மனநிறைவுக்குமான பரிசு" என்கிறார்.

எங்கள் பள்ளி உலகளவில் சிறப்பான வெற்றிகளை வருடந்தோறும் குவித்துவருகிறது, அளவீட்டில் பெரியதாக கின்னஸ் நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது மகிழ்வுக்குரியதே.. ஆனால்....
எந்த அளவு பெரியது என்பதல்ல, என்ன சாதிக்கிறோம் என்பதே காணப்படவேண்டியது
 


No comments:

Post a Comment