Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 19, 2012

பிள்ளைகளின் கல்விக்கு உதவும் நுல்கள் தற்பொழுது அமைச்சில்

(மிஸ்பான்)

பிள்ளைகளின் கல்விக்கு உதவும் நுல்கள் தற்பொழுது அமைச்சில் உள்ள புதிய நுல் விற்பனை வளர்ச்சி மையத்தில் கிடைக்கின்றன.

அமைச்சின் புதிய நூல் விழற்பனை வளர்ச்சி மையத்தில் பிள்ளைகளின் கல்விக்கு உதவக் கூடிய நுல்கள் தற்பொழுது கிடைக்கின்றன
என்று கல்வி அமைச்சர் மாண்பு மிகு பந்துல குணவர்தனா அவர்கள் கூறினார்கள்.

கடந்த 23 ம் திகதி கல்வி அமைச்சின் வளாகத்தில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஊடாக ஆரம்பிக்கப் பட்டுள்ள புதிய நூல் விற்பனை வளர்ச்சி மையத்தின் திறப்பு விழாவில் உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த நூல் விற்பனை வளர்ச்சி மையத்தின் ஊடாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட பிள்ளையின் கல்விக்கு தேவைப்படும் பாடநூல்கள், ஆசிரியர் கைநூல்கள், இணைப் பாடநூல்கள் மற்றும் கடந்த கால பரீட்சை வினா விடை நூல்கள் யாவும் மலிவு விலையில் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. அத்துடன் எதிர்வரும் காலத்தில் மாத்தறை, காலி, மருதானை புகை வண்டி நிலைய முன்றில், அநுராதபுரம் ஆகிய நகரங்கள் என்றவாறு தீவு முழுவதிலும் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கும் வண்ணம் இத்தகைய மையங்கள் மேலும் பலவற்றைத் திறப்பதற்கு அமைச்சு நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றது.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் தனதுரையில், தீவின் அனைத்து பகுதிகளிலும் இருந்து அமைச்சுக்கு வரும் மக்களுக்கு அமைச்சின் நுழைவாயிலுக்கு அருகில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் இந்த மையத்தில் அவர்களின் பிள்ளைகளுக்குத் தேவையான நூல்களை மலிவு விலையில் பெற்றுக் கொள்ள முடியும். அதன் ஊடாக தரமான உயரிய நூல்களை பிள்ளைகள் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். எதிர்வரும் காலத்தில் மிகவும் வெற்றிகரமான சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட அனைத்துலகத்தால் ஏற்றுக் கொள்ளத் தக்க நூல்கள் சிங்கள, தமிழ் மொழிகளில் அடுத்த ஆண்டு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் அச்சிடப்பட்டு வெளியிட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. என்றார்.

அத்துடன் பல்வேறு மீளாய்வுகளை பரவலாக்கி பரீட்சை வினா-விடை நுல்களை அச்சிட்டு வெளியிட கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டம் பாடசாலைப் பிள்ளைகளுக்கு பெரிய உதவியாக அமைந்தது என்று கூறிய கல்வி அமைச்சர் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஊடாக மிகச் சிறந்த செயற்றிறன் மிக்க பயன் நிறைந்த சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் திரு எச். எம். குணசேகர, கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் திரு டப். எம். ஜே. புஷ்பகுமார உள்ளிட்ட அமைச்சு அலுவலர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment