Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Friday, October 19, 2012

கலாபூஷணம் அன்புடீன் கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதுக்கு தெரிவு

மப்றூக்

கலந்தர்லெப்பை எனும் பெயரைக் கொண்ட அன்புடீன் - அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனையை பிறப்பிடமாக கொண்டவர். 

கலை, இலக்கியச் செயற்பாடுகளில் இவர் சுமார் 35 வருட காலமாக ஈடுபட்டு வருகின்றார். முகங்கள், சாமரையில் மொழிகலந்து போன்ற கவிதைத் தொகுதிகளும், நெருப்பு வாசல் எனும் சிறுகதை தொகுதியும் இவருடைய படைப்பு நூற்களாகும். 


தபால் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள அன்புடீன் - பல்வேறு சமூக சேவை அமைப்புக்களில் பொஅட்டாளைச்சேனையைச் சேர்ந்த கலாபூஷணம் அன்புடீன் - இந்த வருடத்துக்கான கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 
றுப்பு வாய்ந்த பதவிகளை வகித்து வருகின்றார்.

அன்புடீன் உட்பட  - 09 தமிழ், முஸ்லிம்கள் மேற்படி முதலமைச்சர் விருதினைப் பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலக்கியம், கவிதை, சிறுகதை, கலை போன்ற துறைகளில் உயர்வான ஆக்கப் பணி புரிந்தமைக்காகவே இவர்களுக்கு இவ் விருது வழங்கப்படவுள்ளது.

திருகோணமலையில் நாளைய தினம் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண இலக்கிய விழாவில், இவகளுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. 
                                                                               


No comments:

Post a Comment