Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Monday, October 22, 2012

பணம் இருந்தால்தான் பாராட்டா..? அப்படியாயின் ஏழை மாணவர்களின் கதி?

நடைபெற்று முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப்பெற்று தமிழ்மொழிமூலத்தில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடம்பெற்ற மாணவனுக்கு எதிர்வரும் முதலாம் திகதி ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் பாராட்டு விழாவில் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என மாணவரின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.


ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் கல்வி கற்கு
ம் சாயிபிரசாத் எனும் மாணவன் 192 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

அரச வங்கியொன்றின் அனுசரணையோடு எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி அலரி மாளிகையில் நடைபெறவிருக்கும் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவுக்கு குறித்த மாணவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

குறித்த வங்கியில் குறித்த திகதியொன்றில் குறித்த தொகையினை சேமிப்பு வைப்பு மீதியாக வைத்திருந்த மாணவர்களுக்கு மாத்திரமே இத்தகைய பாராட்டு வழங்கப்படுவதனால் இந்த அழைப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அறிந்த குறித்த மாணவனின் பெற்றோர் அதற்கு பின்னர் குறிப்பிட்ட தொகையினை வைப்பிலிட்டு வங்கிக்கணக்கினை ஆரம்பித்த போதும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகினறது.

பெற்றோர் இது தொடர்பில் ஜனாதிபதி காரியாலயத்துக்கும் பிரதேச அரசியல் பிரதிநிதிகளுக்கும் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

தற்போது ஏனைய மாணவர்கள் குறித்த பாராட்டு விழாவுக்கு செல்லத்தயாராகும் நிலையில் அகில இலங்கை ரீதியில் குறிப்பிடத்தக்க பெறுபேற்றைப் பெற்ற மாணவன் அழைக்கப்படாமையினால் மனரீதியாக பாதிப்புக்குள்ளாகியிருப்பது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பலராலும் வேண்டுகோள் முன்வைக்கப்படுகின்றது.

மாணவர் பாராட்டைப் பெறுவதற்கான தகுதியாக சேமிப்பு மிகுதியையா பெறுபேற்று புள்ளிகளையா கொள்வது எனும் கேள்வி எழுகின்றது.

குறித்த அளவு சேமிப்பினை செய்ய முடியாத பொருளாதார நிலையில் உள்ள மாணவர்கள் அதிக புள்ளிகளைப்பெற்றாலும் பாராட்டைப் பெறும் தகுதி அற்றவர்களா? என்ற கேள்வியை பெற்றோர், சமூக ஆர்வளர்கள், புத்திஜீவிகள் எழுப்புகின்றனர்.


இதுக்கு உங்கள் கருத்து என்ன சொல்லுங்கள் கீழே உங்கள் கருத்தைப்பதியலாம்.

No comments:

Post a Comment