அநுராதபுரம் - கம்பிரிகஸ்வெவ வீதியின் ரலபனாவ பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலியானதோடு மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன், மனைவி மற்றும் 11 வயது மகன் ஆகியோர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 28 வயது மனைவி உயிரிழந்துள்ளார்.
ஏனைய இருவரும் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:
Post a Comment