குடிநீர் கிணறுகள் அல்லது விவசாய தேவைக்கான கிணறுகளுக்கு வரி விதிக்கப்போவதில்லை என அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்துள்ளது.
அரசாங்கமோ அல்லது அமைச்சரவையோ இவ்வாறான ஒரு முடிவை எடுக்கவில்லை என அரசாங்கததின்; பிரதான கொறடாவான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்கமோ அல்லது அமைச்சரவையோ இவ்வாறான ஒரு முடிவை எடுக்கவில்லை என அரசாங்கததின்; பிரதான கொறடாவான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இவ்வாறான வரி விதிப்பு பற்றி அரச அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார். இது அரசாங்கத்தின் தீர்மானம் ஆகாது என தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.
ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டவாறு அரசாங்கம் கிணறுகளுக்கு வரி விதிக்கவுள்ளதா? ஏன ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

No comments:
Post a Comment