Get the Flash Player | Web Solution By :FarhacoolWorks

ஓடும் எழுத்து

அன்பான வாசக உள்ளங்களே எமது தளம் புது பொலிவுடன் புதிய பெயரில் நீங்கள் www.importmirror.com இல் பார்வை இடலாம் என்பதனை தெரியப்படுத்துகிறோம்********உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவெளி> Importmirror என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT அனுப்புங்கள்,** வெளிநாடுகளில் உள்ளவர்கள் தளத்தில் உள்ளது பார்த்து செயற்படுத்தவும்

Wednesday, October 24, 2012

8 வருடங்களுக்கு முன் இலங்கையில் முதன்முதலாக ஒரே சூலில் பிறந்த 5 பேர் இப்போது எப்படி இருக்கிறார்கள்.

சென்ற வாரம் கண்டி மருத்துவமனையில் கேகாலை தம்பதியினருக்கு ஒரே சூலில் ஐந்து குழந்தைகள் பிறந்து பின்னர் அதில் ஒரு குழந்தை இறந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம் அந்நிகழ்வு இலங்கையில் இரண்டாவது முறை நடந்த சம்பவம் என்பதும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டன.


இதன்போது முதன் முதலாக இலங்கையில் ஒரே சூலில் ஐந்து க
ுழந்தைகள் பிறந்த சம்பவம் 2004ம் ஆண்டு நடந்ததாகவும் செய்திகளில் நினைவு கூறப்பட்டது.

2004ம் ஆண்டு ஒரே சூலில் பிறந்த ஐந்து குழந்தைகள் இப்போது எப்படி இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என அறிய சிங்கள மொழி ஊடகம் ஒன்று புறப்பட்டது..

2004ம் ஆண்டு ஒக்டோபர் 6ம் திகதி இலங்கையில் புத்தம் புதிய சாதனை ஒன்று பதியப் பட்டது. ஆம் இலங்கையில் முதன் முதலாக ஒரே சூலில் ஐந்து குழந்தைகள் கொழும்பு காசல் மருத்துவ மனையில் பிறந்து முழு நாட்டையுமே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இவர்களின் தாய் தந்தையர் ( சமிலா வீரசேகர - நிமல் பியதிஸ்ஸ ) பிலிமதலாவையை சேர்ந்தவர்கள். (இம்முறை ஒரே சூலில் பிறந்த ஐந்து குழந்தைகளின் பெற்றோர் இவர்களின் பக்கத்து ஊர் கேகாலையை சேர்ந்தவர்கள்.)

ஐந்து வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த இவர்களுக்கு 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் ஒரே சூலில் பிறந்தாலும் இவர்கள் சாதாரண குழந்தைகள் போல் சுகப்பிரசவமாக பிறந்ததும் அபூர்வ நிகழ்வே..

தற்போது மூன்றாம் ஆண்டில் கல்விகற்கும் இவர்கள் படிப்பிலும் சுட்டி. காலையில் எழும்பி பாடசாலை செல்வது முதல் இரவில் தூங்க செல்லும் வரை இவர்களால் தங்களுக்கு எவ்வித சிரமமும் இல்லை என்று இந்த பெற்றோர் சான்றிதழ் தருகிறார்கள்.

ஒரு நிமிடம் கூட போரடிக்காத இவர்களின் குடும்பம் பார்ப்பவர்களுக்கே சந்தோசம் தரக்கூடியதே..

No comments:

Post a Comment